jokes
‘‘கறுப்புப் பண ஒழிப்பு தோல்வில முடிஞ்சிருக்குனு எப்படிய்யா சொல்ற?’’ ‘‘நாமதான் வெளில இருக்கோமே தலைவரே!’’ - கி.ரவிக்குமார், நெய்வேலி - 803.
‘‘எங்க கட்சில கோஷ்டியே இல்ல’னு அந்த தலைவர் சொல்றாரு...’’ ‘‘அப்படியா? அவரு எந்த கோஷ்டிக்கு தலைவரு?!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை - 5.
‘‘என்னைப் பார்த்தா ‘பாமரத்தனமா இருக்கேன்’னு சொல்ற..?’’ ‘‘வேறென்ன சொல்ல தலைவரே... சிபிஐ குற்றப் பத்திரிகை அனுப்பியிருக்காங்கனு சொல்றேன்... ரிசப்ஷனுக்கு போகலாம்னு நீங்க சொல்றீங்களே!’’ - ஆர்.லட்சுமிநாராயணன், தூத்துக்குடி - 2.
‘‘என்னது... மப்புல நான் தப்பா பேசிட்டனா..?’’ ‘‘ஆமாம் தலைவரே... ‘ஏமாந்த மக்களால் நான். ஏமாறப் போகும் மக்களுக்காகவே நான்’னு பேசிட்டீங்க!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு - 9.
‘‘வெளிநாட்டுக்கு போறப்ப ப்ளக்ஸ் வைங்கனு சொன்னது வாஸ்தவம்தான்... அதுக்காக ‘நாட்டை விட்டு செல்லும் ஊழலே’ன்னா வைப்பாங்க!’’ - எஸ்.எலிசபெத் ராணி, பழைய விலாங்குடி.
‘‘நேத்து என்னை ‘சொக்கத் தங்கம்’னு புகழ்ந்தவங்களை எதுக்குய்யா கூட்டிட்டு வந்திருக்க..?’’ ‘‘செய்கூலி வாங்கத்தான் தலைவரே!’’ - ஆர்.லட்சுமிநாராயணன், தூத்துக்குடி - 2.
‘‘ஏன் தலைவரே போலீசை பார்த்துட்டு பம்முறீங்க..?’’ ‘‘பின்னே... ‘ஏழைகளுக்காக தீ குளிக்கவும் தயார்’னு பேசிட்டேன்... நிஜமாவே என்னை கொளுத்திட்டாங்கனா..?!’’ - சரவணன், கொளக்குடி.
|