எல்லாம் மாயா!



-த.சக்திவேல்

இந்த உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் தொழில்நுட்பமே வெர்ச் சுவல் ரியாலிட்டி! சினிமா, வீடியோ கேம்ஸ் தவிர சில டெக்னிக் சார்ந்த விஷயங்களில் மட்டுமே இப்போது இருக்கின்ற இந்த வெர்ச்சுவல் ரியாலிட்டி இனி கன்ஸ்யூமர் ப்ராடக்டுகளில் ஊடுருவப் போகிறது.

உதாரணத்துக்கு ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிட செல்கிறோம். வெளியில் அது சாதாரண கட்டிடம். உள்ளே? சுறாக்கள் சீறிப் பாயும் ஆழ் கடலாக இருக்கலாம். அல்லது வான்வெளியாக காட்சி தரலாம். இந்த அனுபவத்துக்காகவே மீண்டும் மீண்டும் அந்த ஹோட்டலுக்கு செல்வீர்கள். இதேபோல் ஷாப்பிங் மால், தியேட்டர் என எல்லா இடங்களும் வெர்ச்சுவல் ஆக மாறும். பூமியின் நினைவே மறந்து போகும். எல்லாம் மாயா!