100 வருடங்களுக்குப் பின் திருப்பித் தரப்பட்ட புத்தகம்!
-த.சக்திவேல்
சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது அந்த பழமையான பொது நூலகம். எடுத்துப் போன புத்தகங்களை திருப்பித் தருவதற்காக வாசகர்கள் வரிசையில் நிற்கிறார்கள். திருப்பப்பட்ட ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தை பார்த்ததும் நூலகர் அதிர்ச்சியடைகிறார். காரணம், அந்தப் புத்தகத்தை வாசகர் எடுத்துச் சென்று நூறு வருடங்கள் ஆகிறது! 1917ல் மார்ஷ் டிக்கின்சன் என்பவர் அந்நூலை எடுத்துச் சென்றிருக்கிறார். அவரது கொள்ளுப் பேரன் ஜான்சன் அதை இப்போதுதான் திருப்பித் தந்திருக்கிறார்!
 என்ன நடந்தது? புத்தகத்தை கொண்டு சென்ற சில நாட்களிலேயே மார்ஷ் இறந்துவிட்டார். படிப்பதற்காக அப்புத்தகத்தை டிரங்க் பெட்டியில் அவர் வைத்ததை யாரும் கவனிக்கவில்லை. 1996ல் அவரது கொள்ளுப் பேரனான மார்ஷின் பார்வையில் அது பட்டிருக்கிறது. ‘‘நல்ல நூல். படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. எல்லோருக்கும் இதை சிபாரிசு செய்கிறேன்’’ என்கிறார் ஜான்சன். தினமும் 10 சென்ட் அபராதம் விதித்தால் கூட 100 வருட தாமதத்துக்கு 3650 டாலர் கட்ட வேண்டியிருக்கும். ஆனால், நூலகம் ஃபைன் போடவில்லை. அந்த புத்தகத்தின் பெயர் ‘40 Minutes Late!’
|