jokes



‘‘பயப்படாதீங்க அங்கிள்... உங்க பொண்ணுக்கு நான் உயிர்த் தோழியா இருப்பேன்...’’
‘‘என் பயமே அதுதாம்மா..!’’
- பாலா சரவணன், சென்னை - 128.

‘‘தலைவர் ரொம்ப முன்னேறிட்டாரு...’’
‘‘அப்படியா?’’
‘‘பின்னே... முன்னாடி எல்லாம் அவர் மேல செருப்பு வீசுவாங்க... இப்ப பழைய ரூபா நோட்டை வீசறாங்களே!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு - 9.

‘‘நீங்க எனக்கு கடவுள் மாதிரி டாக்டர்...’’
‘‘சந்தேகமே வேண்டாம். நான் கடவுளேதான். ஆபரேஷன் முடிஞ்சு இப்ப நீங்க சொர்க்கத்துக்கு வந்திருக்கீங்க!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி - 803.

‘‘டாக்டருக்கு காது சரியா கேட்காது போலிருக்கு..?’’
‘‘எப்படி சொல்ற?’’
‘‘என் ஃப்ரெண்டுக்கு நெஞ்சு வலினு சொன்னேன். தலையை ஆட்டிட்டு இடுப்புக்கு கீழ வைத்தியம் பார்க்கிறாரே!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை - 5.

‘‘தலைமை மேல விசுவாசம் இருக்க வேண்டியதுதான்... அதுக்காக இப்படியா?’’
‘‘என்ன ஆச்சு?’’
‘‘குழந்தைக்கு பேர் வைக்கச் சொன்னேன்... ‘சின்னம்மா’னு வைச்சுட்டாரே!’’
- வி.சகிதா முருகன், முத்தையாபுரம்.

‘‘பத்து வட்டிக்கு பணம் வாங்கற அளவுக்கு அப்படிஎன்ன அவசரம்?’’
‘‘மாமியாருக்கு உடம்பு சரியில்ல... ‘அம்மா’ இருந்த ஆஸ்பிட்டல்ல சேர்க்கணும்!’’
- சரவணன், கொளக்குடி.