ஆள் பாதி ஜீனஸ் மீதி!ஜீன்ஸுக்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலருக்கும் விருப்பமான டிரெஸ் சந்தேகமேயில்லாமல் ஜீன்ஸ்தான். அழுக்குத் தெரியாது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் ஆண்களும் பெண்களும் இந்த உடையை விரும்ப வேறொரு காரணம் இருக்கிறது. அது, Feeling comfortable.

இதன் பூர்வீகத்தை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் இருந்த இடத்தில் இருந்தே கல்லெடுத்து அடிப்பீர்கள். ஸோ, வரலாறு முக்கியம் அமைச்சரே வகையறாக்கள் விக்கிபீடியாவில் jeans என்று தட்டி ஓபன் ஆகும் பேஜை மனப்பாடம் செய்யவும்! Coming to the point - ஜீன்ஸ் என்னும் ஒற்றைப் பெயரில் அழைக்கப்பட்டாலும் ஒவ்வொரு ‘வகை’க்குப் பின்னாலும் ஒரு ‘வகை’ இருக்கிறது. அது என்ன ‘வகை’? எந்தெந்த ஜீன்ஸை எந்தெந்த இடங்களில் அணியலாம்?

ரூம் போட்டு யோசித்த இந்த வினாக்களை டிசைனரான ஷாலினி விசாகனிடம் முன் வைத்தோம். ‘‘வாரே வாவ்… எனக்கும் ஜீன்ஸ் அணிய பிடிக்கும். ஆனா, ஒவ்வொரு ஏரியாவுக்கு ஒவ்வொரு மாடல்...’’ என்றபடி டேட்டாக்களை அள்ளி வீசத் தொடங்கினார். ‘‘ஜீன்ஸ்ல பல வகைகள் இருக்கு. எல்லாமே இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ப டிசைன் செய்யப்பட்டவை. மொத்தம் மூணு ஸ்டைல். அப்பர் வெய்ஸ்ட், லோ வெய்ஸ்ட், லோ ஹிப். மூன்றுக்கும் என்ன வித்தியாசம்? இதை பெண்கள் புரிஞ்சுகிட்டா போதும். ‘ஐ’ம் ஆல்வேஸ் ஹாட் மச்சி...’ என நகர்வலம் வரலாம்!  

ஹை வெய்ஸ்ட் ஜீன்ஸ் (High Waist Jeans): தொண்ணூறு சதவிகித இந்தியப் பெண்களின் சாய்ஸ் இதுதான். தொப்புளுக்கு மூணு இன்ச் மேலே ஏறி இருக்கும். இடுப்புப் பகுதி? அஸ்கு புஸ்கு. ஃபுல் கவர். இதுக்கு மேல என்ன போடறது? டோன்ட் ஒர்ரி. டிரெண்டியான டி-ஷர்ட் அல்லது ஷர்ட். தட்ஸ் ஆல். உங்களை வரவேற்கும் அலுவலகத்துக்குள் கெத்தாக நுழையலாம்.

ஓகே. ஹெச்.ஆர்., பிஸினஸ் பெண், மேனேஜர் என அப்பர் போஸ்டிங் என்றால்? இதுக்கும் சொலூஷன் இருக்கு. விருப்பமான டாப்ஸுக்கு மேல் ஃபார்மல் கோட். முடிந்தது. மாடர்ன் போல்ட் லேடி லுக் தானாக ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்! இன்னொரு விஷயம். 1970, 80களில் டிரெண்டில் இருந்த பென்சில் டிப், இப்ப ஜீன்ஸுல இரண்டறக் கலந்திருக்கு. ஸோ, இளம் பெண்களின் சாய்ஸ் + ஸ்டைல் இந்த பென்சில் டிப் ஜீன்ஸ். 

லோ வெய்ஸ்ட் ஜீன்ஸ் (Low Waist Jeans): முதல்ல சொன்னது, பூரா இதுக்கும் பொருந்தும். என்ன, இந்த லோ வெய்ஸ்ட் ஜீன்ஸ், தொப்புளுக்கு மூணு இன்ச் கீழ இறங்கி இருக்கும்! 1990கள்ல அதிகளவு பெண்கள் இந்த ஸ்டைலைத்தான் பயன்படுத்தினாங்க. இதுல முன்பக்க ஜிப் கூட சின்னதா இருக்கும். கரெக்ட். சட்டுனு பல்பு எரியுது இல்லையா... அதேதான், சிம்ரன், த்ரிஷா ஸ்பெஷல்!

லோ ஹிப் ஜீன்ஸ் (Low Hip Jeans): நம்ம பெண்களுக்கு பெரும்பாலும் இது செட் ஆகாது. ஏன்னா, அமெரிக்கா, இங்கிலாந்து பெண்களை மனசுல வைச்சு உருவான டிசைன். அவங்க உடல்வாகு நேரா இருக்கும். ஸோ, இது சூட் ஆகும். நம்ம பெண்களோட உடல்வாகு இதுக்கு நேர் எதிர். வளைஞ்சு, நெளிஞ்சு இருக்கும். அதனால கொஞ்சம் குனிந்தாலே பின்பக்கம் ஜீன்ஸ் இறங்கிடும். உள்ளாடை பளிச்சுனு தெரிஞ்சுடும். ஸோ, நடிகைகள் மட்டுமே கேஷுவல், பார்ட்டி, ஜாலி மீட்டுக்கு இதை அணியறாங்க. டூயட் காட்சிகளுக்கு நம்ம டைரக்டர்ஸ் இதைத்தான் ஹீரோயின்ஸுக்கு பரிந்துரைக்கிறாங்க.

பூட் கட் (Boot cut): சரியா கால் முட்டிலேந்து கொஞ்சம் லூசா கீழ இறங்கி 18 இன்ச் வரைக்கும் பெல்பாட்டம் போகும். ஜோதிகா, கிரண் மாதிரி ஸ்வீட் பப்ளி பெண்கள் 1990 - 2000 தொடக்கத்துல இதை பயன்படுத்தினாங்க. இப்பவும் பப்ளி பெண்கள் இதை அணிந்தா அழகா தெரிவாங்க. என்ன... பூட் கட் போடும்போது ஓரளவுக்கு ஹீல்ஸ் பயன்படுத்தணும்.

எலிபெண்ட் பாட்டம் (Elephant Bell bottom): அதே பூட் கட். ஆனா, கீழ பெல்பாட்டம் சைஸ் 18 இன்ச்சுக்கு மேல இருக்கும். இப்ப இந்த மாடலை டெனிம் பலாஸோ பேண்டுகளா பெண்கள் அணிய ஆரம்பிச்சிருக்காங்க. 

பென்சில் டிப் (Pencil tip): லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா கலக்கறது இதுதான். கணுக்காலோட நின்னுடும். ஸ்கின்னி, டைட் ஜீன்ஸ். சைஸ் ஜீரோ ஆர்வத்தை தூண்டுறது இந்த ஸ்டைல் + மாடல்தான். லூஸ் டாப் இதுக்கு பெஸ்ட் சாய்ஸ்.

-ஷாலினி நியூட்டன்

No

கொலுசு, பூ, எண்ணெய் தடவி தலை சீவுதல், வளையல்கள்... வேண்டாம். போலவே உடலுக்கு சற்றும் பொருந்தாமல் இறுக்கமாக அணிய வேண்டாம். பப்ளி பெண்கள் பென்சில் டிப் பக்கம் செல்லாமல் இருப்பது நல்லது. இதற்கு பதிலாக கேஷுவல் பேசிக் ஸ்டைல் அல்லது லூஸ் ஃபிட் ஜீன்ஸ் பயன்படுத்தலாம்.