செம பசி மாமு!சூர்யாவின் அசுர உழைப்பில் அசரடிக்கும் ‘சிங்கம் 3’யைப் பார்க்க செம பசியோடு வெயிட்டிங்.
- எம்.மனோகரன், ஈரோடு

ஸ்டார்களின் 2017 ப்ரேயர்கள், கனவையும், லட்சியங்களையும் சொன்ன அமர்க்களத் தொகுப்பு ஆசம்.
- அ.விஜயராமன், கடலூர்.

வடிவேலுவின் வாழ்வனுபவங்களை இயல்பாகக் கூறிய ‘Download மனசு’ அனுபவங்களின் திரட்சி.
- எஸ்.பி.மணிமொழி, தர்மபுரி.

அல்சரிலிருந்து தப்பிக்கும் அவசிய டிப்ஸ்களைக் கூறிய ‘உயிரமுது’, ஆரோக்கியத்தின் ஆணிவேர்.
- எஸ்.பரமன்குமார், மதுரை.

பயணத்திற்கான தனித்துவ தங்க விதிகள் தந்த ‘முகங்களின் தேசம்’ பயண திசைகாட்டி.
- யூ.முத்துவேந்தன், கோவில்பட்டி.