BARாளுமன்றம் - இவ்விடம் அரசியல் பேசாதீர்கள்



* ‘மன்னார்குடி’ல ‘காலை’ தூக்கிட்டா அது ‘மன்னர்குடி’தானே?

* வயசானாலே உடம்பு முடியாமப் போய் பல்லு கொட்டத்தான் செய்யும்... அதுக்காக நோ‘பல்’னு கிண்டலடிக்கலாமா..?

* பொதுச் செயலாளரா இவர்தான் வருவார்னு முன்னாடியே நாஸ்ட்ரோடாமஸ் சொல்லிட்டாராமே...

* குனிந்த பின் முதுகே துயரம் கொள்ளாதே...

* முன்னாடில்லாம் மொட்டை போட்டா ‘பழனியா, திருப்பதியா’ன்னு கேப்பாங்க. இப்ப maxi‘mum’மா mini ‘mum’மானு  கேட்டு அசிங்கப்படுத்தறாங்க...

* ‘அடிமைப்பெண்’ல வாத்தியார் சிங்கத்தை அடக்கிட்டாருன்னு வாதாட ஒரு வக்கீல் கூடவா இல்ல?

* டீக்கடை லாபத்துல போயிருந்தா அரசியலுக்கே வந்திருக்க மாட்டாருனு சொல்றதா... இல்ல... டீக்கடையையே லாபமா நடத்தத் தெரியாதவர் எப்படி பதினெட்டு பட்டிய காப்பாத்துவாருன்னு யோசிக்கறதா?

கட்டிங் மாஸ்டர்