கமென்ட் கோயிந்து



சக்திவேல் மருதமுத்து

திருச்சி பேருந்து நிலையத்தில் ‘ஏ.டி.எம்மில் பணம் எடுக்க ஆட்கள் தேவை’ என விளம்பரப் பலகைகள்: செய்தி
வேலையில்லா திண்டாட்டத்தை போக்குறதுக்காகத்தான் மோடி பழைய நோட்டை செல்லாதுன்னு அறிவிச்சாருன்னு இப்ப புரியுதா?

சின்னம்மா முதல்வராக வேண்டி தொண்டர்கள் மொட்டை: செய்தி
அப்ப நீங்க அடிச்ச மொட்டை அம்மா செத்ததுக்கு இல்லையா அண்ணாச்சி..?

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு 1 கோடி ரூபாய் பரிசு: மத்திய அரசு
என்னய்யா இது... கடைசில லாட்டரி சீட்டு விக்கிறவன் ரேஞ்சுக்கு போயிட்டீங்க..?

சிலருக்கும் மட்டும் அதிக அளவில் ரூ.2000  கிடைப்பது எப்படி? அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி: செய்தி
நம்மள மாதிரியே ஜட்ஜய்யாவும் பேங்க் வரிசையில காத்துக் கிடந்துருப்பாரு போல!

சமூக வலைத்தளங்களில் எனக்கு கணக்கு இல்லை: சி.ஆர்.சரஸ்வதி
இருந்துருந்தா, இங்க கலாய்க்குற கலாய்ல இந்நேரம் நீங்க அரசியல்லயே இருந்திருக்க மாட்டீங்க மேடம்!

வாபஸ் பெறப்பட்ட 14.5 லட்சம் கோடி ரூபாய்க்கு இணையாக புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்படாது: அருண் ஜெட்லி
அதான் எப்படியும் கள்ளநோட்டு கும்பல் விட்டுருவானுகளே நமக்கு எதுக்கு வீணா அச்சடிக்கிற செலவுன்னு யோசிக்குறார் போல!

ஓவியங்கள்: கண்ணா