கெமிஸ்ட்ரி சூப்பர்!



மிடாஸ் டச் ‘ஜெயம்’ ரவியின் எனர்ஜி படிக்கும்போதே எங்களுக்குள்ளும் பாய்கிறது. படத்திற்குப் படம் ரவி, ஹன்சிகா கெமிஸ்ட்ரி சூப்பர் டெவலப்.
- கே.சுவிதா ரமணன், சென்னை-33

புயல் துயரம் தாண்டி, வீழ்ந்த மரங்கள் குறித்து பேசிய ‘மரங்களுக்கு மாற்று’ கட்டுரையில் அடுத்து வரும் சம்மர் பயம் பிராக்டிகல் பீதி. நம் மண்ணுக்கு ஏற்ற மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என இப்போது எல்லோரும் பேசுவது ஆறுதல். இந்தப் பேச்சு செயலாகவும் மாறவேண்டும். 
- வி.புவியரசன், வேலூர்.

மழை பொய்த்து அரசின் கருணை கைவிட, வாழும் வழியின்றி தற்கொலையை நாடும் விவசாயிகளுக்கான கனிவான அறிவுறுத்தலாக அமைந்த ‘விவசாயிகள் தற்கொலை’ அரசு கவனம் செலுத்தவேண்டிய அவசர செயல்பாடு.
- பி.சுகவேந்தன், விழுப்புரம்.

டெக்னோ யுகத்திலும் ‘பண்டமாற்று’ ரீஎன்ட்ரியாகிறதா? மாவேள் பூங்கதிர்வேல் கான்செப்ட் அடிதூள்.
- எம்.மணிவேல், திருவண்ணாமலை.

ஜெயகாந்தனின் ஆளுமையை ஆழ அகல விளக்கிய யுகபாரதியின் எழுத்துகள் அதிர்வேட்டு உற்சாகம்.
- டி.ஆராவமுதன், கும்பகோணம்.

கல்லீரல் எப்படி உடலைக் கை
விடாமல் காக்கிறது என்று விளக்கிய ‘செகண்ட் ஒப்பீனியன்’ நுட்பமான மருத்துவ வழிகாட்டி.
- செ.ராஜாரமணி, திருச்செந்தூர்.

தீபச்செல்வனின் கவிதையில் லட்சிய வானம் கண்ணில் பூக்க தாய்நிலத்தின் மடியில் போராளியின் இறுதிக்கணம் நெஞ்சு நிரப்பும் தீராத மண்வாசம்.
- பி.பனிமலர் ஹாசினி, கோவை.

‘முகங்களின் தேசம்’ தொடரில் கூட்டுக்குடும்ப வாழ்வை பகடியாக்கியதோடு, காஷ்மீரின் உரி பயண விவரிப்பு திக் திடுக் பயம்.
- கே.ஜி.சுரேஷ்குமாரன், பாலக்காடு.

எந்த உணவிற்கு யெஸ், எதற்கு நோ என துல்லியமாக விளக்கிய ராஜமுருகனின் ‘உயிரமுது’ டைனிங் டிலைட்.
- அ.ராமமூர்த்தி, திருப்பூர்.

பழகிய, பாதித்த, கடந்துவந்த மனிதர்கள் என கவித்துவ வார்த்தைகளில் நம் வானத்தை திறந்தது குட்டி ரேவதியின் ‘டவுன்லோடு மனசு.’ கற்ற பாடமாக அவர் சொன்ன ‘எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்றால் ஒளிந்தோ, மறைந்தோ இருக்கக்கூடாது’ என்ற வரிகள் எழுச்சி தந்தன.   - ஏ.ஹிதயத்துல்லா, கோவில்பட்டி.

‘குட்டிச்சுவர்’தான், அதிலும் மெகா சிந்தனைகளை சுருக்கெனச் சொல்வதில் ஆல்தோட்ட பூபதி ஆல்கிளாஸ் ஹிட்.
- ஆர்.எஸ்.பிரிஸில்லா, நாகர்கோவில்.

(இந்த இதழில் ‘உயிரமுது’ தொடர் இடம்பெறவில்லை.)