ஜிவ்வ் தமன்னா!



ரோஸ் பிங்க் பேபி தமன்னாவின்  ஜிவ்வ் ப்யூட்டி பிளஸ் ஜில் பேச்சில் நாங்கள் மயங்கி சரிந்துவிட்டோம்.
-ஜா.முருகானந்தம், கோவை.

யுஎஸ் அதிபர் காய்ச்சலைத் தாண்டி அதன் இன்டர்நேஷனல் உள்குத்துகளை ஆனியனாய் உரித்த உரையாடல் நையாண்டி அசத்தல்.
-எம்.கார்த்திகா, திருச்செந்தூர்.

அனு பார்த்தசாரதியின் ஃபேஷன் அனுபவங்கள், இன்றைய ஃபேஷன் உலகின் ஹார்ட்பீட்டைச் சொன்னது.
-வி.சித்ராமுத்து, புதுச்சேரி.

கோயில்களின் தனித்துவ அழகைச் சிதைக்கும் உள்நாட்டு அந்நியர்களின் அநாகரிகம் பேசிய ‘முகங்களின் தேசம்’ தொடரில் காரம் ஜாஸ்தி.
-ஆர்.ஷண்முகவேலன், பெங்களூரு.

சீஸன் காய்கறிகளை உண்டு சிறப்பாக வாழ வழி சொன்ன உயிரமுது தொடர் நம் பாரம்பரியம் காக்கும் ரெசிபி.
-வெ.ஜீவநதியா, வேலூர்.

ஃபெஸ்டிவல் உற்சவத்திலும் ரிமைண்டர் வைத்து ஸ்டார்களுக்கு தேங்காய் உடைக்கும் சதீஷ் வாழ்வில் இனி லக்ஷ்மி என்ட்ரி ஸ்டார்ட்.
-ர.ரேஷ்மிகுமரன், சென்னை-33.

சுவரில் வண்ணம் பூசி மக்களின் மனதிலும் மாற்றத்தை விதைக்கும் ‘துவக்கம் பாய்ஸ்’ படைக்கு திருஷ்டி சுற்றி வரவேற்கலாம்!
-செ.கபாலீஸ்வரன், சென்னை-4

பாரம்பரிய சிலைகளை விற்கும் கதைக்களத்தில் திகில் ட்ரெயின் ஓட்டி தடதட த்ரில் கூட்டி மங்கல ஒலியோடு சுபம் சொன்ன சுபாவின் ‘ரகசிய விதிகள்’ தொடர் அட்டகாச நிறைவு.
-பி.ஜெயப்பிரகாஷ், திருவண்ணாமலை.

வாழ்வை அழகாக்கும் நட்பின் தாய்மை கணங்களை நினைவுறுத்திய ‘உறவெனும் திரைக்கதை’யும்், அறிவுமதியின் ‘நட்புமொழி’யும் படிக்கப் படிக்க புத்தியில் உறைகிறது. அருமை!
- எம். செம்பாதேவி, திருவள்ளூர்.

தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை மக்களின் நலனுக்காக செலவிட்ட உன்னத நீதிமான் சி.பி. ராமசாமியின் வாழ்வு கோமல் அன்பரசனின் எழுத்தில் பெருமித நெகிழ்வு.
-மு.பரணிதேவி, சிவகங்கை.

சூரியின் ‘டவுன்லோடு மனசி’ல்  ஏக்கம், துக்கம் என பல்வேறு பகிர்வுகளையும் சிம்பிளாகப் பேசிய அவரின் புதிய முகம் எங்களுக்கு ரொம்பவே புதுசுதான்.
-கி.நீலகண்டன்தவசி, காரைக்குடி.

தீபாவளி ட்ரெஸ், பேலியோ, பேனர் என அனைத்து ஜானர்களிலும் அன்லிமிடெட் நக்கலில் விசில் பறக்கவிடுவது ‘குட்டிச்சுவர்’ ஆல்தோட்ட
பூபதியின் யுனீக் ஸ்டைல்.
-கா.ரகுபதிராசன், திருப்பூர்.