jokes
‘‘ என்ன கபாலி, நேத்து திருடினதுல எனக்கு தர வேண்டிய மாமூலை மட்டும் எடுத்த இடத்துலயே வச்சிட்டேன்னு சொல்ற?’’ ‘‘உங்க வீட்டுலதானே ஏட்டய்யா திருடினேன்...’’
‘‘மூணு வேளையும் வீட்டுலதான் சாப்பிடணும்னு என் மனைவி ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா...’’ ‘‘அதனால?’’ ‘‘இரண்டு பேருக்கும் சேர்த்து பார்சல் வாங்கிட்டு போறேன்...‘‘
‘‘என்னய்யா இது. கூட்டம் பாதிலேயே எந்திரிச்சு போகுது?’’ ‘‘பதறாதீங்க தலைவரே, பத்து நிமிஷம் இன்டர்வெல் விட்டிருக்கோம்...’’
‘‘படம் முடியும்போது, வில்லன் இதுக்கடுத்து ஒரு தெலுங்குப் படத்துல நடிக்கிறார்னு டைட்டில்ல போடுறீங்களே, ஏன்?’’ ‘‘வில்லன் கடைசில என்ன ஆனான்னு காட்டவேயில்லைன்னு ஜனங்க சொல்லக்கூடாது பாருங்க...’’
யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
|