டிரெடிஷனல் பியூட்டி!



இசைப் பிரபலமான பாப் டிலன் 2016ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றது ஆச்சரியம் என்றாலும், பாராட்டுக்குரிய விஷயம்தான். அடுத்து நம் ஊர் பாடலாசிரியர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கலாம் அல்லவா?
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

‘கொடி’ தனுஷின் கேரக்டர் ஸ்கெட்ச், செம மேட்ச். கசாட்டா அழகு நாயகிகளின் ஸ்டில்களில் பறக்கிறது இளமைக்கொடி.
- பி.ரங்கநாதன், திருச்செந்தூர்.

உலகமயமாக்கலால் மினிமம் விலையில் மேக்ஸிமம் பொருட்களைத் தயாரிக்கும் சீனாவை நம்பி இந்தியா மட்டுமல்ல, உலகமே உள்ளது. தேச பக்தி என்ற பெயரில் போகாத ஊருக்கு வழி சொல்பவர்களுக்கு ‘குங்குமம்’ கட்டுரை பிராக்டிகல் பாடம்.
- ஜி.கார்த்திகா, தஞ்சாவூர்.

உணவு ஷேரிங் கடந்து பைக் ஷேரிங், கார் ஷேரிங் என்ற நவீன ஐடியா ரூட்டில் பசுமைச்சூழலைக் காப்பவர்களை லைக் செய்து நிச்சயம் ஃபாலோ செய்யலாம்.
- இரா.கண்மணிராஜா, கும்பகோணம்.

முதுமையின் நிதானமும், இளமையின் வேகமும் இணைய வானில் பொழியும் அன்பு மழையில் அலாதி ருசியை உணர்த்தியது ‘உறவெனும் திரைக்கதை’.
- ஆர்.பாமா விக்சனா, தர்மபுரி.

ஆல்டிகிரி ரகளையில் ஆல்தோட்ட பூபதியின் ‘குட்டிச்சுவர் சிந்தனைகள்’ கும்மாள குற்றாலம்.
- பி.ரஜினேஷ் ராமன், திருப்பூர்.

‘காஷ்மோரா’ நயன்தாராவின் நியூ லுக்கில் டிரெடிஷனல் ப்யூட்டி ஜொலிக்கிறது. கார்த்தி கெட்டப்பில் மிரட்டுகிறார்.
- இ.நிஷா சிதம்பரம், தூத்துக்குடி.

பருவ இளமையை, குறுஞ்சிரிப்பை நினைவுச் சின்னங்களாக மாற்றும் புகைப்படங்களுக்கு டெடிகேஷனாக ‘முகங்களின் தேசம்’ ப்ரில்லியன்ட் க்ளிக் ஷாட். 
- கா.சிவகுருநாதன், திருத்தணி.

பழங்குடிகளின் மொழிகளை எழுத்து வடிவமாக்கி அவர்களின் வாழ்வை நவீன தலைமுறைக்கு அறியத் தரும் ஆசிரியை பூவிழியின் பணி அபூர்வ குறிஞ்சிப்பூ அழகு.
- எல்.மணிபல்லவி, திருவண்ணாமலை.

முந்திரிக்காட்டு மனிதரான கண்மணி குணசேகரனின் டவுன்லோடு மனசில், நதியில் ஓடும் இலையின் தன்மையோடு வாழ்வின் பலகட்ட நகர்வு, அயர்வு ரசிக்க வைத்தது.
- ஹெச்.குமார், திண்டுக்கல்

தனது இழப்பிலும் விளையாட்டை இணைத்து உறவுகளைப் பிணைக்கும் பிள்ளை மனங்களின் ஜன்னல் திறக்கும் இனியனின் டெடிகேஷன் பணி சமூகத்திற்கான உயிர்ச்சத்து.
- கி.ச.மருதுவேலன், தேனி. 

அமெரிக்காவில் த்ரில் வேகம் காட்டிய சுபாவின் ‘ரகசிய விதிகள்’ தொடர், இறந்த கல்யாணி வருகையால் திகில் பயம் ஊட்டியது.
- ம.ரஞ்சனி, ஈரோடு.