கடன்



கௌதமுக்கு அவசரமாகப் பத்தாயிரம் ரூபாய் தேவைப்பட்டது. மாதக் கடைசி. வங்கியில் இருப்பு இல்லை. கைவசமும் பணமில்லை. என்ன செய்வது? யாரிடம் கேட்பது? யோசனையில் ஆழ்ந்தவன் மூளையில் ‘சடா’ரென நுழைந்தான் நாகராஜன். அவனிடம்தான் கேட்க வேண்டும். அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். கதவைத் திறந்த நாகராஜன், “அடடா... வா, கௌதம்” என வரவேற்றான்.

தன் அவசரத்தை விளக்கி, கடனைக் கேட்டான் கௌதம். “உன்னோட நிலைமை புரியுது கௌதம். எனக்கும் இப்ப ரொம்ப டைட். ஒரு மாசம் போனா கொஞ்சம் ஃப்ரீயாகிடுவேன். அப்ப  தர்றேன்” என கை விரித்து விட்டான் நாகராஜன். நொந்து போய் வீடு திரும்பிய கௌதமிடம் அவன் மனைவி சொன்னாள், ‘‘பார்த்தீங்களா? நம்ம அவசரத்துக்குக் கேட்டா நம்மகிட்ட வாங்கிய கடனையே திருப்பித் தரமாட்டேங்கறாங்க. அதுக்குத்தான் யாருக்கும் கடன் கொடுக்க வேணாம்னு நான் அடிச்சுக்கிறது!” 

-மலர்மதி