வலைப்பேச்சு



@HELLOME787 
ஒரு சில இடங்களில் தவறுகள் நடப்பதைப் பார்க்கும்போது, அதைத் தட்டிக் கேட்பதற்கு பதிலாக, ‘பேசாம நாமும் அதே தவறை செய்துவிட்டு சென்றுவிடலாம்’ என்று தோன்றும்.

@aruntwitz 
அடுத்தவனோட டைரியைப் பார்க்காதபோது எடுத்துப் படிக்கிற பழக்கம்தான், அடுத்தவனோட போனை எடுத்துப் பார்க்குறதா உருமாற்றம் பெற்றிருக்கிறது.

@arattaigirl 
லாஜிக் பேசறவங்க எல்லாம் 20 வருஷமா அதைப் பேசிக்கிட்டே ஒவ்வொரு முறையும் ‘பாட்ஷா’வை தவறாம பாத்துடறாங்க!

@rnydeen 
நம்மூர்காரங்ககிட்ட ‘ரஜினி, சச்சின், எஸ்.பி.பி எல்லாம் புடிக்குமா’ங்குற கேள்வியே தப்பு! அவங்களைத் தவிர யாரை புடிக்கும்னு வேணும்னா கேட்கலாம்!

@Nilakathalan_ve 
வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தால் ரெய்டு பண்ணுவாங்களாம்... வருமானமே இல்லாதவனுக்கு சோத்துக்கும் ஏதாவது பெய்டு பண்ணுங்கடா!

@iam_v_jey 
இப்ப பாரதி இருந்து ‘காணி நிலம் வேண்டும்’னு பாடினார்னா... ‘எட்டயபுரத்துக்கு மிக அருகில்’னு எர்ணாகுளத்துல ஒரு பிளாட்டை
அவருக்கும் வித்துருப்பானுக...

@vandavaalam 
செக்யூரிட்டியே ஏழு மொழி பேசுறான்னு சந்தோஷப்படுறதா? இல்ல, ‘ஏழு மொழி தெரிஞ்சவன் செக்யூரிட்டியா இருக்கானே’ன்னு வருத்தப்படுறதா?

@karthiykj 
தமிழ்நாடு என்றால் என்ன?
மீனவர் பிரச்னை, கேரளா - கர்நாடகா பிரச்னை, ஆந்திரா பிரச்னை என அனைத்து பக்கங்களும் பிரச்னை கொண்டதே தமிழ்நாடு!

@writerpara 
வலிக்கும்போதெல்லாம் தலையைத் தனியே கழற்றி வைத்துவிட்டுப் பிறகு எடுத்து மாட்டிக்கொள்ளும் வசதி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!

கவலப்படாதக்கா! ரெண்டு நாள்ல அம்மா உன்னைய திரும்ப கூப்பிட்டுக்கும்... ஏன்னா, சசிகலாங்கற பேருக்கு அப்படி ஒரு ராசி உண்டு!
- பாலா சேலம்

@aruntwitz 
தமிழ்நாட்டில் மழை பெய்தபோது, ரோட்டில் தடுமாறிச் சென்ற ஒருவன் கண்டுபிடித்ததே, ‘மேடு, பள்ளங்களால் நிறைந்ததே வாழ்க்கை’ என்ற தத்துவம்.

@Endhirapulavan 
இந்த அப்பாக்களுக்கு என்னதான் பிரச்னை? மனசுல எவ்ளோ பாசம் இருந்தாலும் வெளில உர்ர்ருன்னே இருக்காங்களே...

@sathish_vss 
நாம பேசுற இங்கிலீஷைக் கேட்டு எவன் ஜெர்க் ஆகிறானோ, அவன் நமக்கு அடிமை!
பேசுன இங்கிலீஷ்ல நிறைய குறை கண்டுபிடிச்சி சொன்னா, அவனுக்கு நாம அடிமை!

ஒரு பிச்சைக்காரன் கோயிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தான். அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய் மட்டும் போட்டார்கள். போதிய வருமானம் இல்லாமல் கடை வீதிக்குச் சென்றான். அங்குள்ள டாஸ்மாக் முன்பு அமர்ந்து
பிச்சை எடுத்தான்.
வரும் குடிமகன்கள் பத்து, இருபது ரூபாய் தாள்கள் போட்டனர். மேலும் ஓசியில் குவார்ட்டரும் கிடைத்தது. போதையில் பிச்சைக்காரன் சொன்னான்... ‘‘தெய்வமே நீ இங்கயா இருக்கே? நான் இவ்வளவு நாளா உன்னை கோயில்ல தேடிக்கிட்டு
இருந்தேனே!’’

ஒரு பெண் தன் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவளைக் காண அவள் தோழன் வருகிறான். உடனே அந்தப் பெண் அவனிடம், ‘‘நீ பாமுக் எழுதிய, ‘அப்பா வீட்டில் இருக்கிறார்’ என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தாயா?’’ என்று கேட்கிறாள். உடனே அவன், ‘‘இல்லை... நான் ஹும்ஸ் எழுதிய ‘நான் எங்கே காத்திருப்பது உனக்காக?’ என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்!’’ என்கிறான்.

‘‘என்னிடம் அந்தப் புத்தகம் இல்லை. வேண்டுமானால் கிரிஷ் எழுதிய ‘மாமரத்துக்கடியில் காத்திரு’ என்ற புத்தகத்தைப் பெற்றுக் கொள்!’’ - இது பெண். ‘‘சரி, நீ நாளை பள்ளிக்கு வரும்போது, ‘ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்’ என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தையும் கொண்டு வா!’’ என்கிறான் அவன்.

‘‘பகத் எழுதிய ‘நான் உன் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்’ என்ற புத்தகத்தையும் உனக்குக் கொண்டு வருகிறேன்!’’ என்கிறாள் அவள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் தந்தை, ‘‘இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?’’ என்கிறார்.
‘‘ஆமாம் அப்பா... அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்!’’ என்கிறாள் பெண். ‘‘அப்படியானால், நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய ‘வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை’ என்ற புத்தகத்தையும் மறக்காமல் கொடு!’’ என்கிறார் அப்பா.

நீதி: அடேய், நீ எல்.கே.ஜி படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா!

பெருமைக்காக சொல்லலைன்னு சொல்லிட்டு, பிறகு சொல்பவை அனைத்தும் பெருமைக்காகவே இருக்கும்!
- எம்டிஸ் மெயில் பெங்களூர்

முருகேசு ஓவரா குடிச்சிருந்தார். அவர் பைக்கை நிறுத்திய போலீஸ்காரர் கேட்டார்... ‘‘இந்த நடு ராத்திரியில இப்படி ஃபுல்லா குடிச்சுட்டு எங்கே போறே?’’
முருகேசு: குடிப்பதனால் வரும் தீமைகள் பற்றி ஒரு சொற்பொழிவு இருக்கு. அதைக் கேட்கத்தான் போறேன்!
போலீஸ்: சொற்பொழிவா? இந்த நேரத்திலா? என்ன கதை விடுறே? யார் பேசப் போறாங்க... சொல்லு!
முருகேசு: வேற யாரு? என் பொண்டாட்டியும் மாமியாரும்தான்!

கடமைக்காக கேட்கப்படும் ‘நல்லாருக்கியா?’, ‘சாப்ட்டியா?’ போன்ற கேள்விகள் பதில்களை எதிர்பார்ப்பதில்லை!
- ப்ரீதா

ஒரு கிராமத்து ஏழைப் பையனும் அவன் குடும்பமும் பட்டணத்துக்கு வந்தாங்களாம். அங்கே ஒரு ஷாப்பிங் மாலுக்கு போனாங்களாம். அங்கே அந்தப் பையன் ஒரு அபூர்வமான விஷயத்தைப் பார்த்தானாம். உடனே அப்பாவைக் கூப்பிட்டு, ‘‘அப்பா, அதோ அந்த சுவர் தானாவே ரெண்டா பிரிஞ்சி தானா மூடிக்குது!’’ என்று காட்டினானாம்.

முன்ன பின்ன லிஃப்ட்டைப் பார்க்காத அப்பனும், ‘‘நானும் இப்பதான் இப்டி ஒன்றை பாக்கறேன் மகனே!’’னு வாயைப் பிளந்தானாம்.
அந்த நேரம் பார்த்து ஒரு 40 வயது ஆன்ட்டி, பட்டனைத் தட்டி லிஃப்ட்டை திறந்து உள்ள போனாளாம். கதவும் மூடிக்கிச்சாம். இந்த கிராமத்து அப்பாவும் மகனும் வாய மூடாம என்னதான் நடக்குதுனு பார்த்துக்கிட்டே இருந்தாங்களாம்.

பக்கத்துல இருந்த டிஸ்ப்ளேவுல நம்பர் ஒண்ணு ஒண்ணா கூடிக்கிட்டே போச்சாம் 1... 2... 3... 4... 5... 6... அப்புறம் திரும்ப ஒண்ணு ஒண்ணா குறைஞ்சு 1க்கே வந்ததும் கதவு திறந்துதாம். உள்ள இருந்து ஒரு 24 வயதுப் பெண் - சூப்பர் அழகி வெளியில வந்தாளாம்.
உடனே அந்த அப்பன் பையன்கிட்ட சொன்னானாம்... ‘‘டேய் மகனே! உடனே போய் உங்கம்மாவ கூட்டி வா!’’

தியேட்டருக்குள்ள அணுகுண்டு எடுத்துட்டுப் போனா கூட விட்ருவானுங்க போல. குடிச்சிட்டு இருந்த அரை கப் ஜூஸ் எடுத்துட்டுப் போனதுக்கு 296 கேள்வி கேட்டுட்டு புடுங்கி வச்சிக்கிட்டானுங்க!
- பிரபல எழுத்தாளர்

சட்டங்களை கடுமையாகக் கடைப்பிடிக்கும் சவூதி அரேபியாவிலும் சம்பளம் கொடுக்காமல் இருப்பதும், ஊழியர்கள் சோற்றுக்குத் திண்டாடுவதும் நடக்கிறது. மோசமான முதலாளிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். வேலையை வாங்கிவிட்டு தெருவில் விடுவது எல்லாம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
- குமார் துரைசாமி

அந்தமான் சென்று மாயமான விமானத்தில் பயணித்தவர் மொபைல் இயங்குகிறது: செய்தி
‪#‎ ஆனா‬ இன்னும் உங்களால ட்ரேஸ் பண்ணமுடியல... இதுல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? சரி... சரி... அப்டியே உண்மையா இருந்தா, இத்தனை நாளா சார்ஜ் நிக்கிறது எந்த கம்பெனி மொபைல்னு மட்டும் சொல்லிடுங்க!
- விவிகா சுரேஷ்

இலங்கை ரயில்வேயை மேம்படுத்த இந்தியா ரூ.2,130 கோடி நிதியுதவி: செய்தி
# இந்திய ரயில் கக்கூஸ்ல ஒரு டப்பா வைக்க வக்கில்ல, இலங்கை ரயிலுக்கு 2,130 கோடி
- பூபதி முருகேஷ்

எதிர்வீட்ல பொண்ணு வீட்ட விட்டு ஓடிப் போச்சுன்னு பதறி தேடிக்கிட்டு இருக்காங்க... அது பக்கத்து தெருவுல Pokemon Go விளையாடிட்டு இருக்கு!
- பூபதி முருகேஷ்

மோடி இன்னும் பிரிஸ்மா போட்டோ போட முடியாத அளவுக்கா பிஸியாக இருக்கிறார்!?
- சுரேஷ்குமார் மடுரசி எம்