jokes



தலைவருக்கு பண ஆசை அதிகமாகிடுச்சா... எப்படிச் சொல்றே?’’
‘‘யார் வந்து குழந்தைக்கு பெயர் வைக்கச் சொன்னாலும் ‘கன்டெயினர்’னு வச்சிடுறாரே!

சமீபத்திய குற்றப் பத்திரிகையை வாங்கினதும் தலைவர் சோகமா இருக்காரே... ஏன்?’’
‘‘மாதம் ஒருமுறையிலிருந்து இனி குற்றப் பத்திரிகை வாரம் ஒருமுறை அதிக பக்கங்களுடன் வெளியாகும்னு அறிவிப்பு வந்திருக்காம்!’’

போகேமான் புதுசா ஆரம்பிச்சிருக்காங்கன்னு சொன்ன உடனே தலைவர் என்ன சொன்னார்..?’’
‘‘அது புதுசா ஆரம்பிச்சிருக்கற கட்சின்னு நினைச்சு, அதுக்குத் தாவிடலாமான்னு கேக்கறார்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.