வலைப்பேச்சு



@kandaknd  
கலைஞர்தான் என் எதிரி - சீமான்
# அப்போ ராஜபக்சே?
‘‘யோவ், நான் காரு, வீடு, வாசல்னு செட்டிலாக காரணமே என் தெய்வம் ராஜபக்சேதான்யா என் சிப்சு!’’

எவனொருவன் மொபைல் போனை சைலன்ட்ல வச்சிருக்கிறானோ, அவன் யாரிடமாவது கடன் வாங்கினவனா இருப்பான். இல்லைன்னா யாரையாவது காதலிப்பவனாக இருப்பான்!
- கீதன் இராசதுரை

@arungandhi23 
‘‘செல்போன் கண்டுபிடிச்சவன செருப்பால அடிக்கணும்’’னு வீட்டம்மா சொல்லும்போது சுதாரித்துக் கொள்ளாதவன் முட்டாள்!!



@iTz_vijii 
நன்றிமிக்க உள்ளத்தின் அடையாளம் என்பதற்காகத்தான் கண்ணீரில் உப்பை வைத்தான்...

@im_pisasu  
2 சொட்டு போட்டா அது போலியோ. 4 சொட்டு போட்டா அது உஜாலா. 2880 சொட்டு போட்டா அது குவாட்டர்... இதுதான் இன்னைக்கு மேட்டர்!

@indiavaasan  
ஐந்து வருடங்களாக ‘நான்’, ‘என் ஆட்சி’ என்று பேசிய ஜெ. இன்று தனக்குத் தெரியாமல் ஊழல் நடந்ததாய் நடத்தும் நாடகத்தைத் திறமையாக அரங்கேற்றும் ஊடகங்கள்...

மனைவி என்பவள்:

திருமணமான
புதிதில்...

கணவர் கூப்பிடாதபோதே... ‘‘என்னங்க, கூப்பிட்டீங்களா? இதோ வர்றேன்!’’

‘‘எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க, ரெண்டு நாள் அம்மா வீட்டிற்குப் போய்ட்டு வரலாம்!’’

‘‘உங்களுக்குப் பிடிக்காத முட்டைக்கோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்!’’

‘‘எனக்குப் புடவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்!’’

‘‘அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க!’’

‘‘உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு!’’

‘‘நீங்க சிரிக்கும்போது பல் வரிசையா, அழகா இருக்கு!’’

‘‘உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க!’’

சில ஆண்டுகள் கழித்து...

‘‘நான் வேலையா இருக்கேன்... அலறாதீங்க! பக்கத்துல வந்து சொல்லிட்டுப் போனா என்ன?’’

‘‘நானும் குழந்தைகளும் போறோம். 10 நாள் கழிச்சி வந்தால் போதும்... புரியுதா?’’

‘‘எனக்கு கோஸ் பொரியல். உங்களுக்கு ஒண்ணும் பண்ணல. ஊறுகாய் போதும்ல?’’

‘‘இது ஒரு கலர்னு எப்படித்தான் இந்த சேலையை எடுத்தீங்களோ!’’

‘‘ம்ம்ம்... உங்க அம்மாகிட்ட இருந்துதான் லெட்டர்!’’

‘‘எவ்வளவு நேரம்தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு!’’

‘‘எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!’’

‘‘உங்க வீட்டு ஆளுங்ககிட்ட வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?’’

‘‘கிரைண்டர் போடுற அன்னைக்குத்தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க!”

பல ஆண்டுகள் கழித்து...

காதில் வாங்குவதே இல்லை!

‘‘போறவளுக்கு வர்ற வழி தெரியும். யாரும் வர வேண்டாம்!’’

‘‘இன்னைக்கு கோஸ் மட்டும்தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க!’’

‘‘ஒரு 600 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்!’’

‘‘உங்களைப் பெத்த இம்சை மகராசிதான் லெட்டர்!’’

‘‘போதும்... போதும்... வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்!’’

‘‘எப்ப பார்த்தாலும் என்ன ஈ..? வாயை மூடுங்க. கொசு போய்ட போகுது!’’

‘‘உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?’’

‘‘சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு!’’

ஒரு பொண்ணு மனசுல இடம் கிடைக்கணும்னா நல்லவனா மட்டும் இருக்கறது முக்கியமல்ல, அந்தப் பொண்ணு மனசுல வேற எந்த நல்லவனும் இல்லாம இருக்கணும்!
- மோகன் குமார்

‘‘சார்! ஐசிஐசிஐ ஹோம் லோன் டிவிஷன்ல இருந்து பேசுறேன். உங்க பேர் தெரிஞ்சுக்கலாமா?’’
‘‘விஜய் மல்லையா’’
டொக்
- நாகராஜ் நடராஜ்

அமைச்சர்கள் ஊழல் செய்வார்களாம். அதை திடீரென்று முதல்வர் கண்டுபிடிப்பாராம். உடனே போயஸ் தோட்டத்துக்குக் கூப்பிட்டு டோஸ் விடுவாராம். பிறகு தண்டனையாக கட்சிப் பதவியை விட்டு நீக்குவாராம். உடனே மீடியாக்கள் ‘முதல்வர் அதிரடி’ என்று கொண்டாடுவார்களாம். என்ன ஊழல் என்று எவருமே சொல்ல மாட்டார்களாம். மீடியாக்களும் கேட்க மாட்டார்களாம். நாமும் கண்டுக்க மாட்டோமாம். இப்படியே அஞ்சு வருஷம் ஆகிடுச்சாம். சரி, விடுங்க... இப்போதாவது சுதாரிச்சுக்கலாம். சிம்புவை தேடிப் போன அந்த ஐந்து தனிப்படை போலீசார் இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்காங்க?
‪#‎ கேப்போம்ல‬
- செல்வ குமார்

@AMadhavaVarma 
ஒவ்வொரு நிதிஆண்டிலும் 26 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஈட்ட திட்டமிடும் எந்த அரசும், தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களைக் காக்க முயற்சிப்பதே இல்லை!

விஜய் மல்லையா‬வுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் வசூலிக்கப்படும்: அருண் ஜெட்லி
# எங்ககிட்ட இருந்துதானே... அதான் தெரியுமே!
- பாபு ராஜேந்திரன்


‘‘கூலிப்படைன்னா என்னாங்க?’’
‘‘பணத்துக்காக மனித உயிர்களைக் கொல்றவங்க...’’
‘‘ஓஹோ... அப்ப இந்த டாஸ்மாக்?’’
- ஜி துரை மோகன்ராஜு

@Ulaganandha 
எல்.கே.ஜிக்கு ஒன்றரை லட்சமா? அடங்கொப்பத்தா... நான் இஞ்சினியரிங்குக்கு வாங்கிய ஒன்றரை லட்சத்துக்கே இன்னும் வட்டி கட்டிட்டு இருக்கேன்!

@dohatalkies 
2011ல் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்!
# மக்களுக்கு பிம்பிலிக்கா பிளாப்பி

விஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் வசூலிக்கப்படும்: அருண் ஜெட்லி ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை பெட்ரோல், டீசல் விலை உயரும்னு சொல்றாப்ல!
- சிவகுமார் செல்வராஜ்

9000 கோடியோட மல்லையாவ தப்பிக்க விட்டுட்டு, கிரிக்கெட்ல ஆப்கானிஸ்தான்காரன் கேட்ச்சை விட்டுட்டான்னு கேலி பண்ணிட்டு இருக்க மனசிருக்கே... அதான் சார் இந்தியன்!
- பூபதி முருகேஷ்

ஒரு இளைஞன் தனது காதலியை வெளியே அழைத்துச் செல்ல ஒரு 350 சி.சி புல்லட் பைக் வாங்கினான். அதில் தனது காதலியை அமர்த்தி ஜாலியாக வெளியே சுற்றினான். ஆனால் இந்த பைக் சத்தத்தில் தனது காதலி பேசுவது அவனுக்கு சரியாகக் கேட்கவில்லை. உடனே அந்த பைக்கை விற்றுவிட்டு ஆக்டிவா வாங்கி அதில் ரொம்ப சந்தோஷமாய் தனது காதலியுடன் வலம் வந்தான். இருவருக்கும் திருமணமானது. இரண்டே மாதங்களில் ஆக்டிவாவை வித்துட்டு மறுபடியும் 500 சி.சி.  புல்லட்டையே வாங்கிவிட்டான்!

பெண்களோடு பழகுவது 3டி கண்ணாடி போட்டுக்கிட்டு படம் பாக்கற மாதிரி... நெருங்கி வர்ற மாதிரி இருக்கும்; ஆனா டக்குனு விலகிப் போயிடும்!
- ராம்ஜி இசைமழலை

@praburemya_ 
விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை - தமிழிசை
# தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல...
‘‘தோ வந்துருச்சில்ல!’’

@kathirpaappy 
நீர் சேமிப்பு பத்தி பேச குடிகாரங்களுக்கே முழு உரிமை இருக்கு! ஒரு துளிகூட வேஸ்ட் பண்ண மாட்டாங்க...

முன்னல்லாம் 3.5 மில்லியன் யூரோ கோக கோலாவில இருந்து வரும், 2.9 மில்லியன் டாலர் செவர்லேயில இருந்து வரும். அதுல ஒரு லாஜிக் இருந்துச்சு. நேத்து நோக்கியாவுலருந்து 2 மில்லியன் உனக்கு வந்துருக்குனு மெயில் அனுப்புறானுங்க. அனுப்புறது ஸ்பேமா இருந்தாலும் அதுல ஒரு நியாயம் வேணாமா? நோக்கியாவுலருந்து கடைசி 14 நாள் சம்பளமே இன்னும் வரல...
- பிரபல எழுத்தாளர்

ஹோண்டா ப்ளெஷர்க்கு ‘கிக்கர்’ டிசைன் பண்ணினவனைத் தெரிஞ்சா சொல்லுங்க... நாலு மிதி மிதிச்சு கிக்கர் எப்படி மிதிக்கிறதுன்னு கத்துக்கணும்.
- பி கதிர் வேலு

@Writter_Naina 
விளையாட பாதுகாப்பில்லைன்னு சொன்னதும் கிரவுண்ட மாத்த முடிந்த மத்திய அரசு, சாமானியனின் உயிருக்கு  ஆபத்துன்னு தெரிந்தும் கெயில் லைன மாத்த முன் வரலை!

கார்த்திக்கின் ‘நாடாளும் மக்கள் கட்சி’ இரண்டாக உடைந்தது. இதைக் கேட்ட கார்த்திக்குக்கே ஒரு செகண்ட் பக்குன்னு ஆகியிருக்கும்... அந்த இன்னொருத்தர் யாருன்னு?
- அம்புஜா சிமி

@naatupurathan 
பாமகவிற்கு 60% மக்கள் ஆதரவு உள்ளது - ராமதாஸ்
# அடிச்சிகூட கேப்பாங்க, ஆனா எந்த மாநிலத்துலனு மட்டும் சொல்லிடாதீங்க!

‏@aruntwitz  
ஒவ்வொரு முறையும் லீவு கேட்கும்போதுதான், நமக்குள்ள இருக்குற ஒரிஜினல் கிரியேட்டர் வெளியே வருகிறான்.

தமிழிசைக்கு மட்டும் ஏன் முதல்வர் வேட்பாளர் ஆசை வரலைன்னு தெரியல... ஒருவேளை அவங்க மட்டும்தான் அவங்க நிலை என்னன்னு புரிஞ்சவங்களா இருக்காங்களோ!
- ஷர்மிளா ராஜசேகர்

@cbdaas 
ஏ.டி.எம்.ல நிம்மதியாய் பணம் எடுக்க முடியுதா? குறுகுறுன்னே பாக்கிறாங்க! மறைச்சு, நெளிஞ்சு, வளைஞ்சு 100 ரூபா எடுக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது!

@Pgp1Ramesh 
அடிக்குற வெயிலுக்கு ஐஸ் கட்டில ரோடு போடுங்கடா. வண்டில போக முடியல... அவ்ளோ அனல் பறக்குது!

குதிரையின் காலை உடைத்த பாஜக எம்.எல்.ஏ.விற்கு ஐம்பது ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம்.
#‎ இதுக்கு‬ நீங்க குதிரைக்கே தூக்கு தண்டனை குடுத்துருக்கலாம் யுவர் ஆனர்!
- ராஜா அறந்தாங்கி