jokes
கட்சிக்காக தலைவர் உயிரைக்கூட குடுப்பாரு...’’ ‘‘அதுக்காக... குழந்தைக்குப் பேர் வைக்கச் சொன்னா ‘ஸ்டிக்கர்’னா வைக்கிறது..?’’ - சி.சாமிநாதன், கோயமுத்தூர்.
தலைவர் மேல சி.பி.ஐ. புதுசா வழக்கு போட்டிருக்காமே..?’’ ‘‘ஆமாம்! அவர் வீட்ல ரெய்டு செய்த அதிகாரிகள் முதுகுல ஸ்டிக்கர் ஒட்டினாராம்!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்கணும்னு நீங்கதானேய்யா சொன்னீங்க..?’’ ‘‘அதுக்காக நமீதா, அஞ்சலி, நயன்தாரா படங்களைப் போட்டு அறிக்கையை தயார் செஞ்சது நியாயமில்ல தலைவரே!’’ - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
‘‘தொண்டர்கள் எதுக்குய்யா குழந்தைகளோட கூட்டத்துக்கு வந்திருக்காங்க..?’’ ‘‘நீங்க சொல்ற குட்டிக்கதையில குழந்தைங்க எல்லாம் நல்லா தூங்கறாங்களாம் தலைவரே, அதான்!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘மெக்கானிக்கல் டிப்ளமோ படித்த எங்கள் தலைவரால் மட்டுமே பழுதான அரசு எந்திரத்தை சரி செய்ய முடியும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்!’’ - அ.ரியாஸ், சேலம்.
அந்தக் கட்சில கோஷ்டிச் சண்டை ரொம்ப அதிகமாயிடுச்சா?’’ ‘‘ஆமாம். கட்சி ஆபீசுக்குள்ள பதுங்கு குழியெல்லாம் வெட்டி வெச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோங்களேன்..!’’ - அஜித், சென்னை-126.
‘‘அடுத்தபடியாக... கூட்டணிக்கு வராத கட்சியினரை கண்டபடி திட்டிப் பேச தலைவர் அவர்களை அழைக்கிறேன்!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
|