ஸ்பீக்கரு...



‘‘பெரியோர்களே... தாய்மார்களே... மற்றும் சி.பி.ஐ. ரெய்டால் திடீர் புகழ் பெறத் தொடங்கியிருக்கும் தலைவர் அவர்களே...’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘இப்போது கூட்டணிக்காக அலையும் தலைவர், தேர்தல் முடிந்ததும் முன்ஜாமீனுக்காக அலைவார் என்பதை...’’
- பர்வீன் யூனுஸ்,
ஈரோடு.

கட்சி வளர்ச்சிக்குத் தடையா யாராவது இருந்தா என்கிட்டே சொல்லுங்க...’’
‘‘உங்களைப் பத்தி எப்படி தலைவரே உங்ககிட்டேயே சொல்றது..?’’
- தஞ்சை தாமு,
தஞ்சாவூர்.



கூட்டணி பற்றி ரொம்ப ஆழமா தலைவர் சிந்திச்சுக்கிட்டு இருக்கார்...’’
‘‘அதுக்காக நீர்மூழ்கிக் கப்பல்ல உட்கார்ந்து யோசிக்கறது நல்லாவா இருக்கு..?’’
- ஆர்.சீதாராமன், சீர்காழி.

கட்சியில அவர் எந்தத் துறையில இருக்கார்..?’’
‘‘ஸ்டிக்கர் ஒட்டுற துறையில இருக்காராம்...’’
- ஏ.மூர்த்தி,
புல்லரம்பாக்கம்.

மன்னிக்கணும்! கட்சி ஆபீஸ்னு நினைச்சு உள்ளே வந்துட்டேன். இது என்ன ஏலக் கம்பெனியா..?’’
‘‘ஐயோ, இது கட்சி ஆபீஸ்தான்! உள்ளே சீட் ஏலம் நடந்துக்கிட்டு இருக்கு...’’
- தீ.அசோகன்,
சென்னை-19.

தலைவர் ஏன் கட்சி ஆபீஸ்ல கஸ்டமர் கேர் நம்பர் துவக்கறார்..?’’
‘‘வாக்காளர்கள் யாருக்காவது ஓட்டுக்குப் பணம் கிடைக்கலைனா உடனே இந்த நம்பரைக் கூப்பிட்டு பேசலாமாம்!’’
- அம்பை தேவா,
சென்னை-116.