திருப்போரூரில் உறைகின்ற தேவனே அருணகிரி உலா-120



‘‘கந்த மேவிய போரூர் நடம்புரி
தென்சி வாயமு மேயா யகம்படு
கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா’’
என்று பாடுகிறார் அருணகிரியார்.

திருப்போரூர் என்றழைக்கப்படும் திருத்தலம், செங்கல்பட்டிற்கு வடகிழக்கே 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் அசுரருடன் போர் புரிந்த தலங்களுள் ஒன்று, எனவே சமரபுரி என்றும் அழைக்கப்படுகிறது. வன்மீக நாதர் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். சிதம்பர சுவாமிகள் பாடியுள்ள திருப்போரூர் சந்நிதி முறை மிகப்பிரபலமான நூல்; 726 பாடல்களைக் கொண்டது. அருணகிரிநாதர் இங்கு 4 திருப்புகழ்ப் பாக்களை அருளிச் செய்துள்ளார்.திருப்போரூர்க் கோயிலில் முருகப் பெருமானுக்கே சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. முருகன்- கந்த சுவாமி என்றழைக்கப்படுகிறார். முருகன்- வள்ளி- தெய்வானை திருவுருவங்கள் மரத்தாலானவை, எனவே அபிஷேகம் இல்லை கர்ப்பக்ருஹத்தின் வடகிழக்கில் ஆறுமுகன், வள்ளி தெய்வானை எழுந்தருளியுள்ள இடத்தில் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் கந்த சஷ்டி ஆறு நாட்களிலும் சிறந்து அபிஷேகமும் பூஜையும் நடைபெறுகின்றன. கோயில் முன் மண்டபத்திலுள்ள தூணில் முருகப் பெருமானது நடன வடிவம் உள்ளது. இங்கு வில்லேந்திய வேலன், சுவாமி நாதனாக தந்தைக்கு உபதேசம் செய்யும் முருகன் ஆகியோரது செப்புத் திருமேனிகளும் உள்ளன. காடாக இருந்த பிரதேசத்துள் முருகன் குடி கொண்டிருப்பதைக் கண்டறிந்து கோயிலை இன்றுள்ள நிலைக்கு வரும்படித் திருப்பணி செய்தவர் சிதம்பர சுவாமிகள்.

கோயிலுள் இவருக்குத் தனிச் சந்நதி உள்ளது.வெளி மண்டபத்தில் புன்னகைததும்பும் முகத்துடன் தெய்வானை காட்சி தருகிறார். பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இங்கு பழைய முருகன் கோயில் இருந்திருக்கிறது என்பதை கோயிலிலுள்ள சில கல்வெட்டுக்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆயின் அருணகிரிநாதர் ‘‘அழகிய தேரும் சூழ்ந்துள்ள மதிலும் அழகு நிறைந்த கோபுரங்களும் அடுக்கு மெத்தைகள் கொண்ட மாளிகைகளும் ஆக நீடிய அழகுகள் வாய்ந்த திருப்போரூரில் உறைகின்ற தேவனே, தேவர்கள் பெருமாளே,’’ என்று பாடியுள்ளதிலிருந்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் அமைப்பு சிறப்பாக விளங்கியது என்று கொள்ளலாம்.

‘‘வனத்தே வேடுவர் மாதா மோர்மினை
யெடுத்தே தான்வர வேதான் யாவரும்
வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் ...... விறல்வீரா
மலர்த்தே னோடையி லோர்மா வானதை
பிடித்தே நீள்கர வாதா டாழியை
மனத்தா லேவிய மாமா லானவர் ...... மருகோனே
சினத்தே சூரர்கள் போராய் மாளவு
மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி
திருத்தோ ளாஇரு பாதா தாமரை ...... முருகோனே
திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக
ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள
திருப்போ ரூருறை தேவா தேவர்கள் ...... பெருமாளே.’’

காட்டில் வாழ்ந்த வேடர் குலப் பெண்ணாம் மின் போன்ற ஒளி கொண்ட வள்ளியை நீ எடுத்துப் போகவே வேடர்கள் உன்னை வளைத்துச் சூழ, ஒரு வாள் கொண்டு அவர்களை வென்ற பெருமைமிக்க வீரனே!மலர்களின் தேன் சொட்டும் நீர் நிலையில் யானையைப் பிடித்துக் கொண்டு ஒரு பெரிய முதலை போர் செய்ய, சக்ரத்தைச் செலுத்திய மாலின் மருகனே!
கோபித்துச் சூரர்கள் போர் செய்து இறக்கும்படி எடுத்து வேலைச் செலுத்தின தீரனே! மாலை அணிந்த அழகிய தோளனே! இரு பாததாமரைகளைக் கொண்ட வனே! அன்றிரவு அறங்காவலர் கனவில் தோன்றிய முருகப் பெருமான் ‘‘என் பக்தனிடமிருந்து எட்டணா வாங்கிக் கொண்டாயே, உன்னால் ராஜ கோபுரம் கட்டிவிடமுடியுமா?’’ என்ற போது அவர் அதிர்ந்து விட்டார். முன் தினம் திருப்புகழ் சபையார்கள் வந்திருந்தனர் என்று வருகைப்பதிவேட்டில் தெரிந்ததும் ‘முருகன் உத்தரவு’ என்று கூறி வாரியார் சுவாமிகளுக்கு எட்டணா மணியார்டர் அனுப்பிவைத்தார்.

சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.மூன்று மாதங்களுக்குப் பின் சுவாமிகள் திருச்சியில் உரையாற்றச் சென்றிருந்த போது அறங்காவலர் அவரைச் சந்தித்துக் கனவில் முருகன் இட்ட உத்தரவைக் கூறினார். அத்துடன் வயலூர்க் கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்டவேண்டிய பணியை சுவாமிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுவாமிகளிடம் அந்த அளவிற்குப் பணம் கிடையாது. ஆனால் விவரம் அறிந்த பல அன்பர்களும் தாமாகவே முன்வந்து பொருளுதவி செய்யவே, ராஜகோபுரம் கட்டும் பணி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதன் பின்னர் திருச்சியில் மட்டுமல்ல, அருகிலிருந்த வயலூர் முருகன் உலகப் பிரசித்தி அடைந்து விட்டான். திருப்புகழ் நேயர்கள் வாழ்வில் ஒரு முறையேனும் கட்டாயம் சென்று தரிசிக்க வேண்டிய தலம் வயலூர்.

அருணகிரி நாதர் வயலூரில் இருக்கும் பொழுதே முருகன் அடுத்ததாக அவரைத் தான் குடியிருக்கும் விராலித் தலத்திற்கு வரும்படி அழைத்தான் என்பதை ஒரு வயலூர்த் திருப்
புகழில் அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

‘‘தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பி ...... லடியேனைத்
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி ...... யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்தென் ...... மனதாசை
மாசினை யறுத்து ஞானமு தளித்த
வாரமினி நித்த ...... மறவேனே’’
என்று பாடுகிறார்.

மணம் நிறைந்த தாமரையின் மலருக்கு ஒப்பான உனது திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனை, ‘‘மகரந்தப் பொடி நிறைந்த கொன்றை, சுரபுன்னை மகிழமரம் இவைகள் கற்பகவிருக்ஷங்கள் எனும்படி நிறைந்துள்ள விராலி மலையில் நாம் வீற்றிருக்கிறோம். நீ அங்கு வருவாயாக’ என்று கூறி அழைத்தாய்; என் மனமாசுகளை ஒழித்து ஞான அமுதத்தைத் தந்தாய்; அந்த உன் அன்பை ஒரு நாளும் நான் மறக்கமாட்டேன்’’ என்கிறார்.

‘‘பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவல ...... பரயோக
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
சமய நாயக மாமயில் ...... முதுவீர
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவிய ...... பெருமாளே.’’

இப்பாடலில் முருகனை அருணகிரியார் பல விதமாகப் போற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது ஆணவம் எனும் இருளை நீக்கும் சூரியனே!
மூலபுருஷனே!
நாகாபரணரது குமரனே!
ஹரி மருகோனே!
குமரி, சாமளை, உமை எனும் மாது, அமலி, யாமளை, பூரணி, குண கலாநிதி, நாரணி பெற்ற தலைவனே!
குருமூர்த்தியே.
குகனே!

குமரேசனே!
சரவணனே!
உருவத்திருமேனி கொண்டவனே.
வள்ளி மீது ஆசை கொண்ட மணியே!
வண்டுகள் மொய்க்கும் வெட்சி மாலை அணிந்தவனே
‘‘காளி திரிபுரை யந்தரி சுந்தரி
நீலி கவுரிப யங்கரி சங்கரி
காரு ணியசிவை குண்டலி சண்டிகை ...... த்ரிபுராரி
காதல் மனைவிப ரம்பரை யம்பிகை
ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை
கான நடனமு கந்தவள் செந்திரு ...... அயன்மாது

வேளி னிரதிய ருந்ததி யிந்திர
தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி
மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு ...... ளிளையோனே’’
இப்பாடலில் மிக அழகான ஒரு குறிப்பையும் அளிக்கிறார்.
‘‘வேலு மயிலு நினைந்தவர் தம் துயர்
தீர, அருள் தரு கந்த, நிரந்தர
மேலை வயலை உகந்துள நின்றருள்   பெருமாளே’’

வேலையும் மயிலையும் நினைக்கின்ற அடியாரது துன்பம் திரும்படியாக அருள்பாலிக்கின்ற தந்தனே! முடிவற்றவனே! மேலை வயலூர் என்னும் திருத்தலத்தில் உளம் மகிழ்ந்து நின்றருளும் பெருமாளே! என்று உருகுகிறார். இது, சந்நதி முறை இலக்கியங்களுள் தலையாயது.

பிள்ளைத்தமிழ், அலங்காரம், மாலை, தாலாட்டு, திருப்பள்ளி யெழுச்சி முதலான பல்வேறு  சிறு பிரபந்தங்கள் சேர்ந்த ஒரு பெரும் பிரபந்தம் இந்நூல். ஒரு சில பாடல்கள் பின் வருமாறு :-
‘‘இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்
நல்லறுத்து ஞானியல்லேன் நாயினேன் ... சொல்லறத்தின்
ஒன்றேனும் இல்லேன் உயர்ந்ததிருப் போரூரா!
என்றேநான் ஈடேறு வேன்.’’
ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
‘‘நீதி தழைக்கின்ற” போரூர் தனிமுதலே - நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு!

நோயுற்று அடராமல் நொந்து மனம்
வாடாமல்
பாயிற் கிடவாமல் பாவியேன் காயத்தை
ஓர் நொடிக்குள் நீக்கி எனை ஒன் போரூர் ஐயா நின்
சீரடிக் கீழ் வைப்பாய் தெரிந்து.

‘சகல வேதமுமே தொழு சமராபுரி’
முருகனுக்கு அரோஹரா!

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி