சிம்ம கர்ஜனையை உணர்ந்தோம்!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

குலம் தழைக்க அருள்வார் குரு நரசிம்மர் என்ற நரசிம்மரின் புகழ் பாடியிருந்த கட்டுரையை நரசிம்ம ஜெயந்தி சமயம் பார்த்து ஆன்மிகம் படைத்திருந்தது, அதனது ஆன்மிகப் பணிக்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்திருந்தது. கர்நாடக மாநிலத்திலுள்ள சாலிக்கிராமம் என்ற குக்கிராமத்தில் அமர்ந்து ஆசி அளித்துவரும் குரு நரசிம்மர் ஆலயம் இருக்கும் திக்கினைக் காட்டியிருந்த தங்களுக்கு நன்றிகள் பல.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சுந்தரர் மிகப்பெரிய சமூக நீதியை, உண்மையை மாதொரு பாகன் என சிவனை பரந்த மனதை ஊர் அறியச் சொல்கிறார். சம்பந்தரும் ஏழாம் நூற்றாண்டில் மனதிற்கு இதமாக, சமூகம் தழைக்க அன்பு, இரக்க குணமும் பாதுகாக்க பதிகம் பாடி ஆன்மிகத்தை வளர்த்துள்ளார். நம்மாழ்வார், பாரதியார் போன்றவர்கள் ஒரு ஆணின் சரியான வழிகாட்டுதலே பெண்ணின் முன்னேற்றம். மேன்மையுறும் காலங்கள் மாறும்போது கருத்து, நடைமுறைகள் மாறுகின்றன. விமர்சனம் விதி மீறவில்லை. விதி மீறலே விதியாகாது. மன இருளை அறியாமை இருளை அகற்றும் ஞான ஒளி தேவை. ஞானத்தைப் பரப்ப வேண்டும். உணர வேண்டும். உண்மையை உலகிற்கு ஞானத்துடன் கூடிய அறிவுரைகள் அவசியம் தேவை. பெண்மை போற்றப்பட வேண்டும்.
-A.T.சுந்தரம், சென்னிமலை.

குலம் தழைக்க அருள்வார் குரு நரசிம்மர்! கட்டுரை அருமை. தீர்த்தம் எதிரிகளைப் பற்றிய பயம் மனநோய், பாவங்கள் தீர்க்கும் சிறப்புப் பெற்றது. வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில் குரு நரசிம்மருக்கு காணிக்கை எடுத்து வைக்கும் வழக்கம் உள்ளது. நீதிமன்றங்களில் சாட்சி சொல்பவர்கள் நரசிம்மருக்கு முன்பு சாட்சி சொன்னால் நீதிபதி அதை பதிவு செய்வதும் வழக்கம். மெய்சிலிர்க்க வைக்கிறது. பக்தி மணம் பரவுகிறது அரிய நல்ல பல தகவல்கள். ஆன்மிகத்தின் பணி தொடரட்டும்.
- ஆ.தாயுமான சுந்தரம், வெள்ளோடு.

முருகப் பெருமானின் அழகிய தோற்றத்திற்கும், மன்மதனின் அழிவிற்கும் மூலமுதற்காரணமாக சிவபெருமானின், நெற்றிக்கண் அமைந்தது சிறப்பு. சிவபெருமானுக்கு எத்தனை கண்கள் என்ற ஆன்மிக விளக்கமும் அருமை.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

‘இறைவன் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார்’ என்ற தெய்வீக தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் பக்த பிரகலாதனுக்காக தூணிலிருந்து நரசிம்மமாய் வெளிப்பட்டு மகா விஷ்ணு நரசிம்மவதாரம் எடுத்தார் . பகவான் மகா விஷ்ணு  நரசிம்மராய் அவதரித்த நன்னாளுக்கு நவரத்ன மகுடம் சூட்டும் வகையில் அவரின் மகத்துவம் கூறும் கட்டுரைகள், தகவல்கள் இவைகளைத் தொகுத்து ‘நரசிம்மர் ஸ்பெஷல்’ இதழைப் படைத்திருப்பது கம்பீரமான சிம்ம கர்ஜனைபோல் சிறப்பாக உருவாக்கியிருப்பது மகத்தான முயற்சி. பாராட்டுக்கள்!
- அயன்புரம் டி.சத்திய
நாராயணன், சென்னை-72.

பக்தனின் குறை தீர்க்க கூப்பிட்ட அந்தக் கணமே வேண்டிய முன்னேற்பாடுகளோடு தோன்றிய நரசிம்மர் (அவதார) ஸ்பெஷல் மிகவும் அருமை. நாடு முழுவதுமுள்ள நரசிம்ம ஆலய சிறப்புக்களை விளக்கியதும் சொல்லி வைத்ததுபோல் தெளிவு பெறுஓம் பகுதியிலும் நரசிம்மர் வழிபாடு குறித்து ஹரிபிரசாத் சர்மாவின் விளக்கமும் படிக்கப் படிக்க பரவசமடைய வைக்கிறது. என்ன சொல்கிறது ஜாதகம் பகுதியில் சுபஸ்ரீ சங்கரன், லக்னம், ராசியை குறிப்பிட்டு ஜோதிட ரீதியாக விரிவாக விளக்குவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி அதேபோல குறைபாடு உள்ள அநேகர்களுக்கும் ஜோதிடத்தில் ஆர்வமுள்ள என்னைப் போன்றவர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது நன்றி.
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

அபூர்வ ஸ்லோகம் நம்மை தூக்கிக் காப்பாற்றுவார் நரசிம்மர் வாசித்தேன். என்னையறியாத கவலை எனும் இருள் கரைந்து, ஆன்மிக ஒளி என்னுள் பளிச்சிட்டது. அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் படித்துப் பரவசம் அடைந்தேன். மொத்தத்தில் இதழ் ஆன்மிக ஒளி பாய்ச்சியது.
- சு.இலக்குமணசுவாமி,  மதுரை - 6.

பகவத்கீதை அடுத்த இதழில்