போடுறா வெடியை!
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
நடுப்பக்கத்து வெல்வெட்டு மெத்தை காட்டிய வெளிநாட்டு வித்தையை கண்டு யாம் மெர்சலாகி விட்டோம் சிஷ்யா. - சுவாமி சுப்பிரமணியா, பெங்களூர்.
வாசகர்களின் சந்தேகங்களுக்கு சரோஜாதேவி தருவது வெறும் பதில்கள் மட்டுமல்ல. வாழ்வியல் வழிகாட்டுதலும் கூடத்தான். - விஜயராகவன், பழனி.
அமுல்பேபி அஞ்சலி இப்படி இளைச்சி ஒல்லிக்குச்சி உடம்புக்காரியானது கண்டு மனசு வலிக்குது பாஸ். - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
டப்மாஷ் மூலமாக இதுநாள் வரை எங்களையெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்த புஜ்ஜிம்மா மிர்ணாளினி ஹீரோயின் ஆயிட்டாங்க. போடுறா வெடியை! - கே.நடராஜன், திருவண்ணாமலை.
ரவுடியாக ஆசையா? ‘அசுரன்’ மாரியம்மாவின் பேராசை நிறைவேறிட வாழ்த்துகள். - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
1987 தீபாவளிக்கு ‘அறுவடை நாள்’ வெளியானது. அதற்குள்ளாக 32 வருடங்கள் உருண்டோடிப் போய்விட்டன. ‘அறுவடை நாள்’ என்கிற டைட்டிலில் ‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியை அப்படத்தின் இயக்குநர் ஜி.எம்.குமார் எழுதியதை வாசித்தபோது அந்தநாள் நினைவுகள் நெஞ்சிலே வந்தன. - கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.
‘சரோஜாதேவி பதில்கள்’ பக்கத்தில் போடும் ஸ்டில்ஸில் இருப்பவர்களின் பெயர்களை நாங்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா? உடனே ஏற்பாடு செய்யவும். - கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
|