கிளாமர் பாம்!
இருபத்தொன்பது வயசு ஈஷா ரெப்பா, தெலுங்கு சினிமாவில் பிரபலம். ‘ஓய்’ படத்தின் மூலம் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்தார். படம் பப்படமாகிவிட அவரது ஆசை நிராசையானது. இப்போது மீண்டும் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மூலம் படையெடுக்கிறார்.
இம்முறை விட்ட இடத்தை பிடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இன்ஸ்டாகிராமில் தன்னால் எந்த லெவலுக்கு கவர்ச்சி காட்ட முடியும் என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அம்மணியின் கவர்ச்சி தரிசனத்தைக் கண்டு உள்ளூர் கவர்ச்சி அணுகுண்டுகள் கதிகலங்கிப் போயிருக்கிறார்களாம்.
- சிங்கம்
|