வூடு கட்டி அடிப்பேன்! நந்திதா ஆவேசம்



இதுநாள் வரை பாவாடை, தாவணி, அதிகபட்சம் சுடிதார் என்று அடக்கமான வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நந்திதா ஸ்வேதாவும் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கிறார்.ஸ்டண்ட் டைரக்டரான ராம்குமார் சுப்பராயன் இயக்கும் ‘ஐபிசி 376’ என்கிற படத்துக்குத்தான் இந்த ஆக்‌ஷன் அலப்பறை.பாலியல் வன்புணர்வில் ஈடுபடுபவர்கள் மீது போடப்படும் வழக்குப் பிரிவுதான் ஐபிசி 376.

“பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் டூப் போடாமலே பல காட்சி களில் ஈடுபாட்டோடு சண்டை போட்டிருக்கிறேன். ரத்தம் வழிய வழிய வில்லன்களை வூடு கட்டி அடித்திருக்கிறேன். இப்படம் இதுவரையிலான நந்திதாவின் இமேஜை முற்றிலுமாக மாற்றும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் நந்திதா.

- யுவா