பேயோடு மல்லுக்கட்டும் யோகிபாபு!தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் நீடித்து வருகிறது. அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘காதல் மோதல் 50/50’. வழக்கம்போல் இந்தப் படத்திலும் பேயுடன்  மல்லுக்கட்டு கிறார் யோகிபாபு.கன்னடத்தில் ‘த்ரயா’ என்ற படத்தின் மூலம் ஹிட் கொடுத்த கிருஷ்ணா சாய் இந்தப் படத்தை இயக்குகிறார். இசை  தரண் குமார். ஒளிப்பதிவு பிரதாப். கதை அலெக்சாண்டர்.

படத்தில் யோகிபாபுவுக்கு பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளாராம்  ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன்.இந்தப் படத்தை லிபிசினி  கிராப்ட்ஸ் வி.என்.ஆர். தயாரிக்கிறார்.  இதே நிறுவனம் தற்போது உதயநிதி நாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தை தயாரித்து வருகிறது.

- ரா