இந்துஜா டபுள் தமாக்கா!‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’, ‘பில்லா பாண்டி’, ‘60 வயது மாநிறம்’, ‘பூமராங்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இந்துஜா. அட்லி  இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ‘பிகில்’ பற்றிக் கேட்டால் கையெடுத்துக் கும்பிடுகிறார். “படம்  ரிலீசாகும் வரை வாயே திறக்கக் கூடாதுன்னு அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போட்டிருக்கேன்” என்கிறார்.

ஏ.கே இயக்கும் ‘சூப்பர் டூப்பர்’ படத்தில், ‘ஆண்மை தவறேல்’ படத்தின் ஹீரோ துருவா ஜோடியாக நடித்துள்ள இந்துஜா, முதன்முறை யாக இரட்டை  வேடத்தில் வருகிறார். ஒரு இந்துஜா அதிரடிப் பெண். இன்னொரு இந்துஜா சாதாரணப் பெண். “முதலில் இந்தப் படத்தில் என்னை நடிக்க கேட்டப்ப  தயங்கினேன். எல்லாருமே புதுசா இருக்காங்க. இது நமக்கு செட்டாகுமான்னு பயந்தேன். ஆனா, கதையைக் கேட்டபிறகு உடனே கால்ஷீட் கொடுத்து  நடிச்சேன். நானும் நடிக்க வந்த புதிதில் புதுமுகம்தானே. அதை நினைச்சு இந்தப் படத்தில் நடிச்சேன். கண்டிப்பா எனக்கு நல்லபேர் கிடைக்கும்” என்று  நம்பிக்கையோடு சொல்கிறார்.

- தேவராஜ்