காதல் தோல்வியில் வாடும் அனுஷ்கா!அனுஷ்கா, பிரபாஸ் காதல் பற்றித்தான் தொடர்ந்து பேச்சாக இருந்தது. இருவரும் காதலித்தது உண்மை. இப்போதும் காதலர்களாகவே இருக்கிறார்களா  என்பது சந்தேகம் என்கிறார்கள் இவர்களுடன் நெருங்கிப் பழகிய சிலர். பிரபாஸ் வீட்டார், அனுஷ்காவை ஏற்க மறுத்ததால் இவர்கள் காதல் டமால்  ஆகிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.

இதனாலேயே குண்டான தனது உடலை குறைக்க வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அனுஷ்கா திரும்பினார். அதன் மூலம் தொடர்ந்து  படங்களில் நடிக்க முடியும் என்பது அவரது திட்டம். சினிமாவுக்கு முழுக்கு போட்டு பிரபாஸை திருமணம் செய்யும் முடிவு எடுத்திருந்தால் அவர்  வெளிநாட்டு சிகிச்சைக்கு சென்றிருக்க மாட்டார் என்கிறார்கள். இதற்கிடையே ‘சாஹோ’ படத்தின் ரிலீசுக்குப் பிறகு பிரபாசுக்கு திருமணம் நடக்கும்  என்றும் அமெரிக்க தொழிலதிபரின் மகளை அவர் திருமணம் செய்ய இருப்பதாகவும் டோலிவுட்டில் தகவல் கசிந்துள்ளது. பிரபாஸின் மாமாவும் இந்தத்  தகவலை உறுதி செய்திருக்கிறாராம். இதை அறிந்து அனுஷ்கா கவலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

- ஜியா