பார்த்திபனின் பல ஏக்கர் தோட்டம்!எங்கும் வித்தியாசம் எதிலும் வித்தியாசம் என்று வித்தியாசத்தைக் கடைப்பிடிப்பவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
அவருடைய படைப்புகளைப்  போன்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் வித்தியாசமான கார், உடைகள் என்று பல புதுமைகளை விரும்புபவர்.சாப்பாடு விஷயத்திலும் புதிய பாதையில்  பயணித்து சாப்பிடுவாராம். ‘அத்தனைக்கும் ஆசைப்படு‘ என்பதுபோல் ஸ்டார் ஓட்டல் சாப்பாட்டிலிருந்து ரோட் சைட் கடை வரை டேஸ்ட் பார்ப்பாராம்.  சில சமயங்களில் அம்மா உணவகங்களிலிருந்தும் சிற்றுண்டி வாங்கி வரச் சொல்லி ருசி பார்ப்பதுண்டாம். ஆர்கானிக் உணவுப் பிரியரான பார்த்திபன்  சமையலுக்கு செக்கு எண்ணெயை மட்டுமே பயன்படுத்துகிறாராம். இதற்காக மகாபலிபுரம் டூ பாண்டிச்சேரி ரூட்டில் பல ஏக்கர் நிலப் பரப்பில் தோட்டம்  நிர்வகித்து வருகிறாராம்.

- ஃபுட்டி