அஜித் - அருண்விஜய் மோதுவார்களா?‘நேர்கொண்ட பார்வை’யின் ஓப்பனிங் சாதனையால் தெம்பாக அடுத்த பட வேலைகளை தொடங்கியிருக்கிறார் இயக்குநர் வினோத். ‘நேர்கொண்ட
பார்வை’ பரிசோதனை முயற்சியாக அமைந்ததால், அடுத்து ‘மங்காத்தா’ பாணியில் மாஸ் ஆன படத்தில் நடிக்க அஜித் விரும்பியிக்கிறார். ஏற்கனவே  ஒன்லைனர் சொல்லி ஓக்கே வாங்கிவிட்ட வினோத், மடமடவென்று திரைக்கதை எழுதி படத்தின் மற்ற கேரக்டர்களுக்கு யார் யாரென்று யோசிக்க  ஆரம்பித்துவிட்டார்.

‘தல’யின் கெத்துக்கு டஃப் பைட் கொடுக்கும் வில்லன்தான் வேண்டுமென்று யோசித்தவர் அருண்விஜய்யை தொடர்பு கொண்டிருக்கிறார். “தல  படம்னா கண்ணை மூடிக்கிட்டு நடிப்பேன் சார்” என்று அருண்விஜய் பாசிட்டிவ் சிக்னல் கொடுத்திருக்கிறார். அஜித்திடம் கேட்டதற்கு,  “அருண்விஜய்யோட வேலை பார்க்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி” என்று ஒப்புக்கொண்டாராம். ஏற்கனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு  வில்லனாக நடித்ததின் மூலம் அஜித் ரசிகர்களின் டார்லிங் ஆகிவிட்டவர் அருண்விஜய். மீண்டும் இருவரும் திரையில் மோதினால் பட்டாசாக  இருக்குமென்று ரசிகர்களும் கருதுகிறார்கள்.

- கிருஷ்ணா