not every ball hits!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

not every ball hits என்பது உண்மைதான். ஆனால், நடுப்பக்கத்து பந்து கச்சிதமாய் தாக்கிவிட்டது எங்கள் இதயங்களை.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

கொத்தாண்டு கமகமக்க! முத்தாண்டு முறுவலிக்க! கவர்ச்சியலை கதகதக்க! கட்டெழிலோ தகதகக்க! ‘வண்ணத்திரை’, இளமையிதழ் பளபளக்க! எண்ணக்கயல் நெஞ்சவலையில் இன்பமுடன் துடிதுடிக்க! புத்தாண்டே வருக.. பெரும் சிறப்பு பெருக...
- கவிஞர் கவிக்குமரன், திரைப்படப் பாடலாசிரியர்இயக்குநர் சேரனின் ரசிகர்களான நாங்கள், இத்தனை ஆண்டுகாலமும் அவரது அடுத்த படைப்புக்காக ஆவலோடு காத்திருந்தோம். மீண்டும் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

எட்டு வில்லன்கள், ‘அடங்க மறு’த்து சீறுகிறார் ஜெயம்ரவி என்கிற ‘வண்ணத்திரை’யின் முன்னோட்டப் பேட்டியை வாசித்துவிட்டுத்தான் படம் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது. படத்தில் என்ன இருக்கிறதோ, அதை மட்டுமே மிகையில்லாமல்
பேட்டியில் பேசுகிறார் ரவி.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லுர்.

தொழிலை வைத்து சாதியை இனம் பிரித்தார்கள். தொழிலை இப்போது விட்டுவிட்டார்கள். சாதியை மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற ‘பெட்டிக்கடை’ பட வசனம் சிந்திக்கத் தூண்டுகிறது.
- எம்.லோகு, திருவண்ணாமலை.

நடுப்பக்கத்து ‘பால்’ஸ் (அதாவது waterfalls) தலை முழுக்க கொட்டி மார்கழி ஜில்லுலே மேலும் ஜில்பான்ஸா இருக்கு தலைவா.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாதிக்க களமிறங்கியிருக்கும் சமூக நற்சிந்தனை மிக்க இயக்குநர் சேரனுக்கு பிறந்திருக்கும் இந்த ஆண்டு பொற்காலமாய் அமைய வாழ்த்துகள்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.