TOP 5 HEROINE -நல்ல கனவு



ஆண்டின் இறுதியில் வெளிவந்த ‘கனா’, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முன்னணி நடிகைகளின் பட்டியலில் உறுதியான இடத்தைப் பிடித்துக் கொடுத்திருக்கிறது. சின்ன படம், பெரிய படம், சின்ன கேரக்டர், பெரிய கேரக்டர் என்றெல்லாம் எந்த பேதமும் பார்க்காமல் தனக்குக் கிடைக்கும் பாத்திரங்களை மிகச்சிறப்பாகச் செய்து தருவதுதான் ஐஸ்வர்யாவின் ஸ்பெஷாலிட்டி. அவரது சின்சியரான உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் இந்த ஆண்டு 5 படங்கள். குறிப்பாக ‘வடசென்னை’யில் அவர் காட்டிய நடிப்பு இன்டர்நேஷனல் லெவல்.