TOP 5 HEROINE - ஜோதிமயம்!



ரீஎன்ட்ரியிலும் மிரட்டும் ஹீரோயின்கள் அரிதிலும் அரிது. பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு செகண்ட் இன்னிங்ஸில் அக்கா, அண்ணி வேடங்கள்தான் கிடைக்கும். ஜோதிகாவோ, இப்போதும் ஹீரோயினாகவே மிரட்டுகிறார்.
ஆண்டின் தொடக்கத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக ‘நாச்சியார்’, ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக அமைதியான வேடம், ‘காற்றின் மொழி’ படத்தில் கலாட்டாவான ஆர்ஜே என்று இந்த ஆண்டு முழுக்கவே ஜோ ஆண்டாக அமைந்துவிட்டது. நல்ல திறமையான நடுத்தர வயது ஹீரோயின் அமைந்தால் வித்தியாசமான களங்களில் படங்கள் வரும். ஜோ, அச்சாணி போட்டிருக்கிறார்.