TOP 5 HEROINE- கல்யாண பொண்ணு!



கல்யாணமான புதுப்பொண்ணாக இருந்தாலும் எப்போதும் ஏதோ ஒரு படப்பிடிப்பில் பிஸியாகவே இருக்கிறார் சமந்தா. இந்த ஆண்டு அவர் நடிப்பில் ‘இரும்புத்திரை’, ‘யூ டர்ன்’, ‘சீமராஜா’ என்று மூன்று படங்கள். இதிலும் ‘யூ டர்ன்’ படத்தில் ஹீரோவே இல்லை.
சமந்தா தோளிலேயே விழுந்த முழுபாரத்தையும் தன்னுடைய அனுபவத்தால் தாங்கி, வெற்றிப்படமாக்கினார். நயன்தாராவுக்குப் பிறகு ரசிகர்களிடம் அதிக செல்வாக்கு பெற்றிருக்கும் சமந்தா, இன்னும் பல ஆண்டுகளுக்கு டாப்லிஸ்டிலேயே இருப்பார் என்பது உறுதி.