TOP 5 MOVIE 2018- வடசென்னை



மெர்சல் ஆயிட்டோம்!

தமிழ் சினிமாவின் திரைக்கதைப் போக்கையே மாற்றியெழுதி இருக்கிறார் வெற்றிமாறன். இவ்வளவு துல்லியமான விவரணை களோடு ஒரு நிலப்பரப்பின் அரசியல் இதுவரை பேசப்பட்டதில்லை. காலத்தை முன்பின்னாக புரட்டிப் போட்டு ‘வடசென்னை’ செய்திருக்கும் மேஜிக், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் புதுமையான அனுபவம்.

எவ்வளவு மிகச்சிறந்த நடிகர்கள் தமிழில் இருக்கிறார்கள் என்பதை இப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் உலகத்துக்கு நிரூபித்திருக்கிறார்கள். ராவான சென்னைமொழி ஒட்டுமொத்த தமிழகத்தையுமே வசீகரித்திருக்கிறது. வெறித்தனமாக படத்தின் இரண்டாம் பாகத்துக்காக எல்லோரும் வெயிட்டிங்.