கோலம் போடுவதில் நாங்க கில்லி!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு’ படத்தை குடும்பப்படம் என்று இயக்குநர் முருகேஷ் சொல்லியிருக்கிறார். ஆஷ்னா ஜாவேரியின் ஸ்டில்களைப் பார்த்தால் மொத்த மச்சத்தையும் மிச்சமில்லாமல் படம் பிடித்துக் காட்டி இருப்பார்கள் போலிருக்கே?
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

“பெண்கள் தைரியமாக இருக்கணும். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் தப்பு நடக்க இடம் தரமாட்டேன்” என்று தைரியமாக பேட்டி கொடுத்திருக்கும் பார்கவிக்கு ஹாட்டின் எமோஜிகான்.
- என்.லோகு, திருவண்ணாமலை.

முன்னட்டை அம்ரிதா, பின்னட்டை ராக்‌ஷி கன்னாவென்று மங்களகரமாக அமைந்துவிட்டது இந்த இதழ்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

‘கழுகு-2’ குறித்த ‘வண்ணத்திரை’யின் முன்னோட்டம் படம் குறித்த எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைக்கிறது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பதினெட்டாம் பக்க ஏலமலை கள்ளியிடம் இருக்கும் எக்கச்சக்க புள்ளிகளை அள்ளி கோலம் போடுவதில் ‘வண்ணத்திரை’ வாசகர்கள் நாங்க கில்லி!
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் ‘கனகாம்பரம்’ என்கிற டைட்டிலில் தமிழ்ப் பெருமை பாடியிருக்கும் பாடலாசிரியர் ஏகாதசிக்கு வாழ்த்துகள்!
- ஜி.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘சர்கார்’ படத்தை சரவெடியாக மதிப்பிட்ட ‘வண்ணத்திரை’ விமர்சனக்குழுவுக்கு நன்றி.
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.