லவ் லெட்டரெல்லாம் படிக்க நேரமில்லை பிரதர்! அமைரா ஷாக் கொடுக்கிறார்



‘டங்காமாரி ஊதாரி’ பொண்ணு அமைரா தஸ்தூரை ‘அனேகன்’ படத்துக்குப் பிறகு காணவே இல்லை. இடையில் சந்தானத்துக்கு ஜோடியாக ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் நடிப்பதாக சொன்னார்கள். ஜாக்கிசானுடன் ‘குங்ஃபூ யோகா’, இந்தி, தெலுங்கு என்று ஒரு பெரிய ரவுண்டு அடித்துவிட்டு இப்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷின் ‘காதலை தேடி நித்யா நந்தா’வில் தமிழில் செகண்ட் இன்னிங்ஸ் ஆட வந்திருக்கிறார்.

அவருடைய ‘பகீர்’ இன்ஸ்டாகிராம் படங்களைப் பார்த்துவிட்டு வாட்ஸப்பில் வீடியோ கால் அடித்தோம். Decline செய்யாமல் accept செய்து அரட்டையைத் தொடங்கினார்.“அமைரா என்கிற பேருக்கு என்ன அர்த்தம்?”

“அரேபிய மொழியில் இளவரசின்னு அர்த்தம். அம்மா, ஈரானிய பார்ஸி, அப்பா, டாக்டரா இருக்காரு, ஒரே ஒரு அண்ணன்னு அளவான குடும்பம். மும்பையில் பிறந்து வளர்ந்தேன். படிக்கிறப்பவே மாடலிங்கில் இன்ட்ரெஸ்ட். விளம்பரப்படம் ஒன்றில் நடிக்க ஸ்கூலில் லீவு கேட்டப்போ கொடுக்கமாட்டேன்னுட்டாங்க. நான் ஸ்கூலையே உதறிட்டு, எனக்கு லீவு கொடுக்கிற வேற ஸ்கூலில் போய் சேர்ந்தேன்.”

“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”

“இந்தியில் ‘இஷாக்’தான் முதல் படம். இந்த வருஷத்தோட நான் சினிமாவுக்கு வந்து சரியா அஞ்சு வருஷம் ஆகுது. ஆடிஷனுக்குக் கூப்பிட்டதும் போனேன். வீட்டுல பார்சி, இங்கிலீஷ், குஜராத்தி பேசுவோம். இந்தியிலே கொஞ்சம் வீக்தான். ‘டோன்ட் வொர்ரி... ஆக்ட்டிங் ஒர்க் ஷாப்புக்கு ரெகுலரா வந்திடுங்க. அது போதும்’ னு சொல்லி  எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. அப்புறம் அங்கே ரெகுலரா ஒர்க் ஷாப் போனேன். செலக்ட் ஆனேன். அப்ப எனக்கு டான்ஸும் அவ்வளவா தெரியாது.

 சின்ஸியரா டான்ஸ் கிளாஸும் போனேன். கதக் கத்துக்கிட்டேன். அறிமுகமான ‘இஷாக்’லேயே எனக்கு நல்லபெயர். அந்தப் படத்தை பார்த்துதான் கே.வி.ஆனந்த் சார் கூப்பிட்டு ‘அனேகன்’ கொடுத்தார்.

அப்புறம் ஜாக்கிசான் படம் ‘குங்ஃபூ யோகா’ கிடைச்சது. டோலிவுட்லேயும் பிசியானேன். இப்ப மூணு இண்டஸ்ட்ரியிலும் படங்கள் கைவசமிருக்கு. எல்லா லாங்குவேஜ் டயலாக்குகளையும் இந்தியில் எழுதி வச்சுதான் பேசிட்டிருக்கேன்.”
“அப்படியே உடைஞ்சிடறமாதிரி ஸ்லிம்மா இருக்கீங்களே?”

“நான் ஸ்கூல் படிக்கும்போது கொஞ்சம் பப்ளியாகத்தான் இருந்தேன். அப்புறம் மாடலிங் வந்த பிறகுதான் ஃபிட்னஸ் மீது அக்கறை  வந்துச்சு. ஃபிட்னஸ்னால நாம அழகாகத் தெரிவோம். நமக்குள் ஒரு தன்னம்பிக்கை இருக்கும்.

ஸ்கின்னும் பொலிவாகும்னு சொல்வாங்க. அது உண்மைதான்.  நான் இப்ப  ஜிம்னாஸ்டிக், கிக் பாக்ஸிங், வெயிட் ட்ரெயினிங், யோகா, டான்ஸிங் எல்லாம் ஒண்ணு மாத்தி ஒண்ணு ரெகுலரா ஃபாலோ பண்றேன். அப்புறம் தண்ணீர் நிறைய குடிப்பேன். தினமும் ரெண்டு லிட்டர் தண்ணீர் குடிச்சா ரொம்ப ஹெல்தினு சொல்வாங்க. சீக்ரெட்னு ஸ்பெஷலா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.”

“நிறைய பாய்ஃப்ரெண்டு இருப்பாங்களே?”

“லவ், டூயட் எல்லாம் படங்கள்லதான். நிஜத்துல ரொமான்டிக் பொண்ணு இல்ல. ரியல் லைஃப்ல நான் un romantic கேர்ள். திடீர்னு ஒரு பையன் என் முன்னாடி வந்து நின்னு ஒரு ரோஸ் நீட்டினால் கூட, ‘அழகான ரோஸ் அது. அதை ஏன் செடியில் இருந்து பறிச்சே?’னு அப்பாவியாகக் கேட்பேன்.

சாக்லெட் கொடுத்து ப்ரபோஸ் பண்றவங்ககிட்ட, நீங்க  என்னை குண்டுப் பொண்ணு ஆக்கப் பாக்குறீங்களா பிரதர்?னு கேட்டுடுவேன். அவ்ளோ ஏன்? லவ் லெட்டர் கொடுத்தால் கூட, படிக்க டைம் இல்ல, வாட்ஸ் அப்ல டெக்ஸ்ட் பண்ணி அனுப்புங்கன்னு சொல்லி எஸ்கேப் ஆகிடுவேன். அப்படி ஒரு அன் ரொமான்டிக் ஆளுங்க நான்.”

“உங்களைப் பத்தி நீங்களே விமர்சனம் பண்ணுங்களேன்...”“என்னன்னு பண்றது? ம்... ஐயெம் travel bird, pet lover, fashion queen. அனிமல்ஸ் மேல பிரியம் ஜாஸ்தி. வீட்ல பார்சி ப்ரீட் பூனைக்குட்டி ஒண்ணு வளர்க்குறேன். பெயர் எம்மா. அதுக்குத்தான் என் உம்மா. அப்புறம் நாய்க்குட்டி கிங் லூயி.  விலங்குகள் மீது ப்ரியமா இருக்கறதால நான்வெஜ் ஆசை இல்ல.

Life is a beach, enjoy the wavesங்கறது மாதிரி அழகான கடற்கரையைப் பார்த்து ரசிக்கப் பிடிக்கும். அப்புறம் நான் sea food junkie.  ஃபிஷ் பிடிக்கும். ஆனா, நான் selfish பொண்ணு இல்ல. தினமும் எழுந்தவுடன் காஃபி. அப்புறம் நியூஸ்பேப்பர வரிவிடாமல் வாசிக்கறது ஹாபி. அப்புறம், சில மணி நேரம்  ஃபிட்னஸ் ஒர்க் அவுட். டைம் கிடைச்சா கிரிக்கெட் பார்த்து ரசிப்பேன். பிடிக்காத விஷயம், செல்ஃபி ஹேபிட். அது ஃபேமிலி மெம்பர்ஸா இருந்தால் நோ சொல்லிடுவேன்.”

- மை.பாரதிராஜா