பாப்கார்ன்!*கார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ படம் ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘காதலிக்க நேரமில்லை’ பாணியில் இதன் கதையை அமைத்துள்ளாராம் இயக்குநர் ரஜித் ரவிசங்கர்.

*நீண்டகாலமாக விஜய்யின் சாலிக்கிராம வீட்டில் குடியிருக்கும் விஜய் ஆண்டனி ஆழ்வார்பேட்டையில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

*‘ராட்சசன்’ ஹிட்டுக்குப் பிறகு தன்னுடைய சம்பளமாக நயன்தாராவுக்கு இணையாக கோடிகளில் எதிர்பார்க்கிறாராம் அமலா பால்.

*குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களுக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்சி’. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு குலுமணாலியில் நடைபெற்ற போது ராஜுமுருகனுக்கு காயம் ஏற்பட்டதாம். காலில் கட்டுப் போட்ட நிலையிலும் இறுதிக் கட்ட வேலைகளில் தீவிரமாக இருக்கிறாராம்.

- சுரா