பார்த்தாலே பசி தீருது!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நடுப்பக்க unlimited mealsஐ சாப்பிடவே வேண்டாம். அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கலாம். பார்த்தாலே பசி தீருது!
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

வித்தியாச நடிகர் விஜய்சேதுபதியின் 25வது படமான ‘சீதக்காதி’ குறித்த தொகுப்பு அருமை.
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

எனக்கு வயது 53. என்னுடைய 16 வயதிலிருந்து ‘வண்ணத்திரை’ பார்க்கிறேன் / படிக்கிறேன். சலிக்கவே இல்லை. வாட்ஸப் காலத்திலும்கூட ‘வண்ணத்திரை’ புளோ-அப்புகள்தான் என்னை பரவசப்படுத்துகின்றன. ‘வண்ணத்திரை’யின் சேவை வாழ்க வாழ்கவே.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘மாமியார் தேவயானி, மாப்பிள்ளை தினேஷ்’ என்று நீங்கள் தலைப்பு கொடுக்கும்போதே ஒருமாதிரி வில்லங்கமான கதையோ என்று தோன்றுவது எனக்கு மட்டும்தானா?
- சுவாமி சுப்ரமணியா, பெங்களூரு.

முன்னட்டை மற்றும் பின்னட்டை சோனம் பாஜ்வாவின் ஸ்டில்கள் அருமை.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

அரைச்ச மாவை அரைக்கலாம். புளிச்ச மாவை அரைக்கலாமா என்று அறச்சீற்றத்தோடு நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி,  மாவுமில் சினிமாக்காரர்களின் ரோஷத்தைக் கிளப்புமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியைக் கூவி விற்ற ஆப்பிளான சமந்தாவின் பேட்டி சூப்பர். ஒரு குடும்பம் பிழைப்பதற்காக அவர் செய்த இந்த சிறப்பான விற்பனை சேவையை கைதட்டி பாராட்டுகிறோம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.