ஆடவர்



பேயாட்டம்!

நான்கு அரசுப் பணியாளர்கள். சென்னையில் வெள்ளப் பாதிப்பு குறித்த ஆய்வை செய்ய வருகிறார்கள். ஒரு வீடு எடுத்து தங்குகிறார்கள். அவர்களுக்கு உதவ ஒரு சமையல்காரர். அவர்களில் ஒருவர் மீது பேய் இருக்கிறது. வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்ய வந்தவர்களிடம் பேய்க்கு என்ன வேலை, அந்த பேய் யார் என்பதுதான் ‘ஆடவர்’ படம்.

பெண் கதாபாத்திரமே இல்லாமல் புதுமையாக படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீரஞ்சன். தஷியின் பின்னணி இசையும், பாடல்களும் படத்துக்கு பெரும் பலம்.லீட் ரோல்களை செய்திருக்கும் ராபர்ட், சரவணன், சேதுபதி ஜெயச்சந்திரன், தமிழடியான் ஆகியோர் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பேயாக நடித்திருக்கும் கிரண், மிரட்டியிருக்கிறார். படத்தின் முற்பாதி மிகவும் மெதுவாக நகர்ந்தாலும், பேய் வந்தபின் கதை சூடு பிடிக்கிறது.சாதாரண பேய்க்கதையை வித்தியாசமாக யோசித்திருக்கும் இயக்குநர் கவனிக்க வைக்கிறார்.