கதவெல்லாம் ‘மூடு’ன பிறகு...சரோஜாதேவி பதில்கள்

* உங்களை காதல்
பினாமி, காம சுனாமி என்று அழைக்கலாமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
எதையாவது காமி என்று கேட்காத வரைக்கும் சரி சாமி.

* நிறைநெஞ்சம் பிளஸ் பாயிண்ட்டா?
- கே.கே.பாலசுப்பிரமணியன், குனியமுத்தூர்.
பார்க்குறவங்களுக்கு பப்பரப்பான்னுதான் இருக்கும். சுமக்குறவங்களுக்குத்தான் சுமை தெரியும்.

* அந்த உணர்வுக்கு ‘மூடு’ என்று ஏன் பெயர் வைத்தார்கள்?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
இரவில் கதவெல்லாம் ‘மூடு’ன பிறகு வருகிற உணவு என்பதாலோ என்னவோ....

* மது, சிகரெட் பழக்கம் பெண்களுக்கும் அதிகரிக்கிறதே?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இதெல்லாம் ஆண்களுக்கு மட்டுமே பட்டா போடப்பட்ட போதைகளா? தீயபழக்கங்கள் என்பது ஆண், பெண் இருபாலருமே தவிர்க்க வேண்டியதுதான்.

*ஆண்கள் சப்பாத்தி சுடலாமா?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
உங்க குசும்பு புரியுது. இப்போதெல்லாம் ரெடிமேடு சப்பாத்தி கடைகளில் கிடைக்கிறது. அப்படியே சுட்டு சாப்பிடலாம். மாவெல்லாம் பிசையத் தேவையில்லை.