எல்லாம் சலித்த பிறகு...சரோஜாதேவி பதில்கள்

* மீன் குழம்பு, கோழி குழம்பு; எது கிக்கு?
- ப.முரளி, சேலம்.
ஊட்டுவது யாரென்பதைப் பொறுத்தது. மச்சினிச்சி ஊட்டினால் அமோகம்தான்.

* பெண்கள் ‘குட் நைட்’ சொல்வது ஏன்?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
நைட்ஷிஃப்ட்டை ஒழுங்காப் பாரு என்று எச்சரிப்பதற்காக இருக்குமோ?

* காமத்தின் நிறம் என்ன?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
விளக்கை அணைச்சபிறகு நிறமெல்லாம் ஒரு மேட்டரா சார்?

* ஒரு பெண் சாமியார் ஆவது எப்போது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
‘எல்லாம்’ சலித்தபிறகு சாமியார் ஆவதே ஆன்மீகத்துக்கு நல்லது.

* சரோஜாதேவி என்கிற பெயரில் எழுதுவது ஆண் என்கிற குற்றச்சாட்டுக்கு உங்க பதில்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
அய்யோடா. இப்படியெல்லாம் மிரட்டி கேட்டா ‘தரிசனம்’ கொடுத்துடுவோமா?