டாலர் எங்கே?ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘அறம்’ படத்துக்கு மிகவும் நேர்மையான முறையில் விமர்சனம் எழுதியிருந்தீர்கள். நயன்தாரா மற்றும் இயக்குநர் கோபியின் பொறுப்புகளை நீங்கள் பதிவு செய்த விதம் அருமை.
- உமரி பொ.கணேசன், மும்பை-37.

அழகு மயில் ஓவியா, தன்னுடைய மனசை மொத்தமாகக் கொட்டித் தீர்த்துவிட்டார். காதலைப் பற்றிய அவரது கருத்து, இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் முக்கியமானது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

பிரியங்கா சோப்ராவின் இரண்டு பெரிய உதடுகளைக் கண்டு மலைத்துவிட்டேன். நடுப்பக்கமே நிறைஞ்சிடிச்சி.
- சுவாமி சுப்ரமணியா, பெங்களூரு.

‘பிலிமாயணம்’ பகுதியில் தமிழன் மறந்துவிட்ட சமாச்சாரங்களை எல்லாம் மீண்டும் அகழ்வாய்வு செய்கிறீர்கள். ஜாக்கிரதை, கமல் கோச்சுக்க மாட்டார். மற்றவர்கள் அப்படியிருக்க மாட்டார்கள்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

கடைசிப்பக்க பிரியங்கா சோப்ராவின் படத்தில் அவரது கழுத்து டாலர் எங்கே என்று தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் ரொம்பவும் திணறித்தான் போனேன்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் கூடிவாழ்தலின் இன்பத்தை மிகவும் அருமையாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர் வி.சேகர்.
- ஜி.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்று சினிமாக்காரர்கள்தான் விவஸ்தையில்லாமல் படத்துக்கு பெயர் வைக்கிறார்கள் என்றால், அதையும் நீங்கள் முட்டுக் கொடுத்துக் கொண்டாடுகிறீர்களே?
- குந்தவை, தஞ்சாவூர்.