யாழ்



தமிழ்மண் எதிர்கொண்ட துயரங்கள்!

இலங்கையில் தீவிரமாக போர் நடந்து வருவதால் ஈழத்தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறி, வேறு வாழ்விடம் தேடிப்போகிறார்கள். கண்ணிவெடித் தாக்குதல் எவ்வளவு கொடூரமானது என்பதை கண்கலங்கவைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு குழந்தையை அதன் தாயுடன் சேர்ப்பதற்காக போராடும் இளைஞன், கடைசிவரை காதலியைப் பார்க்க முடியாத சோகம், தன் கைக்குழந்தையைக் காப்பாற்ற இலங்கை ராணுவ அதிகாரியுடன் போராடும் தாய், காதலனை மீட்க லண்டனில் இருந்து வரும் காதலியின் கதி.... இவ்வாறாக தமிழ் மண் சந்தித்த அத்தனை துயரங்களையும் காட்சியாக்கி இருக்கிறார்கள்.

முரட்டு சிங்கள ராணுவ அதிகாரியாக விறைப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் டேனியல் பாலாஜி. யாழ் பற்றிய பெருமையை எடுத்துச் சொல்லும் கோயில் பூசாரியாக வரும் வீர.சந்தானம் மனதில் நிற்கிறார். எஸ்.என்.அருணகிரி இசையில் பாடல்களில்  ஈழத்தமிழ் மணம் பரவுகிறது. ஆதி கருப்பையா  அக்கறையோடு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சிங்கள ராணுவத்தின் கெடுபிடி, தமிழ் மக்களின் அவல  வாழ்க்கை, குண்டு பொழியும் இடத்திலும் குண்டுமல்லியாய்ப் பூக்கும் காதல் என நேர்மையான படத்தை இயக்கியிருக்கிறார் எம்.எஸ்.ஆனந்த்.