இன்னா செய்தாரை ஒறுத்தல்



* முன்னணி இயக்குநர் ஒருவர், “எனக்கு தலன்னு யாரையும் தெரியாது. தெரியாத ஆளை வெச்செல்லாம் படம் இயக்க மாட்டேன்” என்று ஒரு பேட்டியில் சொன்னார். அதே இயக்குநர் கடுமையான பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியபோது, தானாக முன்வந்து கால்ஷீட் கொடுத்து நடித்தார். அதன் பிறகே அந்த இயக்குநர் பெரும்பாலான கடன் பிரச்சினைகளில் இருந்து வெளிவந்தார்.

* பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர் அவர். அவருடைய தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஆசைப்பட்டார் அஜீத். வாய்ப்பு கேட்க அவரது வீடு தேடிப்போனார். ஆனால், வாசலிலேயே தன்னுடைய உதவியாளர்களை வைத்து அஜீத்தை திருப்பியனுப்பி அவமானப்படுத்தினாராம் அந்த தயாரிப்பாளர். எனினும், அந்த தயாரிப்பாளருக்கு கடுமையான கடன் பிரச்சினை என்று தெரிந்ததும், அவருக்கு உதவும் விதமாக கால்ஷீட் கொடுத்து கைதூக்கி விட்டார்.

- டீயார்