போட்டோகிராஃபர் அஜீத்!



* படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில், நடிகருக்கோ அல்லது நடிகைக்கோ தெரியாமல், அவர்களின் அற்புதமான தருணங்களை கேமராவில் பதிவு செய்வது அஜீத்தின் விசேஷ குணம். பிறகு பிரிண்ட் போடப்பட்ட அந்தப் போட்டோக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு லாமினேஷன் போட்டுக் கொடுத்து அசத்துவார்.

* தன் படத்தில் இணைந்து நடிப்பவர்களுக்கு திடீரென்று சர்ப்ரைஸ் தருவது அஜீத்தின் தனிப்பட்ட குணம். ஒருமுறை அப்புக்குட்டியை ஸ்டுடியோவுக்கு வரவழைத்து, தனது குழுவினரைக் கொண்டு அவரை விதவிதமான கோணங்களில் போட்டோக்கள் எடுத்தார். அதை மீடியாவுக்கும் கொடுத்தார். அதுபோல் ஸ்ருதிஹாசன் மற்றும் தன் மைத்துனி ஷாமிலியை வைத்து தனி போட்டோசெஷன் நடத்தினார்.

- தேவராஜ்