ரஜினிக்கு வில்லன்?



* ரஜினிகாந்த் நடித்த படங்களைப் பார்த்து, அவரது மேனரிசங்களை அப்படியே செய்து காட்டுவார் அஜீத். படப்பிடிப்புத் தளங்களில் தான் பார்க்கும் நபர்களின் ஸ்டைல் மற்றும் மேனரிசங்களையும் அப்படியே செய்து காட்டுவார். சிலருடைய குரலில் மிமிக்ரியும் செய்து அசத்துவார். ‘ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது என் ஆசை’ என்று, சில வருடங்களுக்கு முன் அஜீத் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

* ரஜினிகாந்த் கொடுத்த ‘ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ என்ற புத்தகம், அஜீத்தின் சொந்த வாழ்க்கையைப் பெருமளவில் மாற்றியிருக்கிறது. அதைப் படித்தது முதல் இமயமலைக்குச் சென்று வரவேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளதாகவும், அந்த நன்னாளுக்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

- தேவ்