அண்ணா சாலை அழகுப்பள்ளம்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நடிகை தான்யாவின் ஸ்டில்லுக்கு ‘அண்ணா சாலையில் அழகான பள்ளம்’ என்று கமென்ட் கொடுக்க உம்மை விட்டால் வேறு யார் உண்டு?
- ப.முரளி, சேலம்.

சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் பிரச்சினையென்று தவறான பரப்புரைகள் செய்யப்படும் நிலையில், பிரசன்னாவின் விளக்கத்தை வெளியிட்டு உண்மை மலையேற உதவியிருக்கிறீர்கள்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

‘காற்று வெளியிடை’ விமர்சனத்தில் கலாச்சார சீரழிவை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல விளக்கமாகக் கூறியது, ‘வண்ணத்திரை’க்கு சமூகம் மீது இருக்கும் அக்கறைக்கு நல்ல சான்று.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

‘சரோஜாதேவி பதில்கள்’ பகுதிக்கு நீங்கள் போட்டிருந்த வண்ணப்படம், எண்ணெய்க் கிணறைப்போல செம ஆழம்.
- உமரி பொ.கணேசன், மும்பை-37.
பெண்ணியத்துக்காக குரல் கொடுக்கும் வரலட்சுமியின் பேட்டிதான் இந்த வார சிறப்பு.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

சித்திரைத் திருநாளில் நித்திரை மறப்பதற்கு மோக முத்திரை பதித்திருக்கிறது எங்கள் ‘வண்ணத்திரை’.
- கவிஞர் கவிக்குமரன், பெரவள்ளூர்.

ஆறு வித்தியாசங்களை தேடித்தேடி எங்கள் கண்கள் பலான இடங்களில் அலைந்து ராத்திரியெல்லாம் டயர்டானதுதான் மிச்சம்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

நடுப்பக்க அக்‌ஷிதா வண்ணப்படம் கவர்ச்சியாக இருந்தாலும் கலையம்சம் கொண்டிருந்தது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.