தொழிலாளர்களின் தோழன்!



* பாலு மகேந்திரா இயக்கிய ‘ராமன் அப்துல்லா’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னை, பெப்சி தொழிலாளர்களுக்கும், திரைப்படத் தயாரிப்பு மற்றும் இயக்குநர்களின் துறையினருக்கான பிரச்னையாக மாறி விஸ்வரூபம் எடுத்தது.

அப்போது துணிச்சலுடன் களத்தில் இறங்கி, திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கு ஆதரவாகப் பேசினார் அஜீத். இதில் தயாரிப்புத் துறையினர் அஜீத்துக்கு எதிராக மாறி, இனிமேல் அவரை வைத்துப் படம் தயாரிக்கக்கூடாது என்று ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். நாளடைவில் அது மாறிவிட்டது.

* ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தவுடன் லைட் ஆபீசர்ஸ் முதல் சக நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு அஜீத்திடம் இருந்து ‘குட் மார்னிங்’ என்ற வார்த்தை வரும். நெருக்கமானவர்களுக்கு மட்டும் ‘ஹேவ் எ குட் டே’ என்று சொல்வார். டெக்னீஷியன்களுடன் சகஜமாக கைகுலுக்கிப் பணியாற்றும்போது, தான் ஒரு சூப்பர் ஹீரோ என்ற அந்தஸ்து, அவர்களிடம் இருந்து தன்னைப் பிரிக்காது என்று நம்புவார்.

- தேவராஜ்