அப்பாவாக அஜீத்!



* அஜீத் மகள் அனொஷ்கா, மகன் ஆத்விக். இதில் மருத்துவமனையில் அனொஷ்கா பிறந்ததை, டாக்டர்களின் முறையான அனுமதி பெற்று அருகிலிருந்து கவனித்த அஜீத், மகளின் ஒவ்வொரு அசைவையும் வீடியோ படமாக எடுத்து, அதைப் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறார்.

* பொறுப்புள்ள குடும்பத்தலைவனாக இருப்பதில் அஜீத்துக்கு நிகர் அவர்தான். மகள் அனொஷ்காவை பள்ளிக்கு அழைத்துச் செல்வார். பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடந்தால், அதற்கும் செல்வார். அவர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்பார். என்றாலும், தனது கருத்துகளை அவர் இடைச்செருகலாகச் சொல்ல மாட்டார்.

- ராஜ்