ஹலோ..நான் அஜீத் பேசுறேன்!



பழைய நண்பர்கள், பத்திரிகையாளர்களுக்கு திடீர் திடீரென்று போன் செய்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார் அஜீத். இரவு நேரங்களில் எப்போதாவது கூப்பிட்டால், “இப்போ நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா? நான் கொஞ்ச நேரம் பேசலாமா?” என்று நாகரிகமாக முன் அனுமதி பெற்றுக் கொண்ட பிறகே பேசுவார்.

தான் பேசும் விஷயம் மிக முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில், ‘இந்த ஸ்பீச்சை ரெக்கார்ட் பண்ணிக்கலாமா?’ என்று அனுமதி கேட்டு ரெக்கார்டும் செய்வார். இம்மாதிரி ரெக்கார்டு செய்யப்படுவதால் தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்படுகிறது என்பது அவர் நம்பிக்கை.

- தேவராஜ்