ரசிகர்கள் என்னுடைய நண்பர்கள்!



ரசிகர்களை மதிப்பதில் அஜீத்துக்கு நிகர் அஜீத்தான். இந்த முதிர்ச்சி அவருக்கு இன்று, நேற்று வந்ததல்ல. ‘காதல் கோட்டை’ பெரும் வெற்றி பெற்றபோது, ரசிகர்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு, அவர் கொடுத்த பதில்......“சினிமா ரசிகர்கள் பெரும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். கம்ப்யூட்டர் யுகத்தில் அவர்களுக்கு அத்தனையும் தெரிந்திருக்கிறது. அவர்களை நான் பெரிதும் மதிக்கிறேன்.

என்னுடைய நடிப்பைப் பாராட்டும்போது தவறாமல் நன்றி கூறுகிறேன். என் நடிப்பை விமர்சிக்கும்போது, கோபப்படாமல் அவர்கள் சொல்லும் குறைகளை திருத்திக் கொள்ளவே முற்படுகிறேன்.என்னுடன் பழகிய ரசிகர்களுக்கு தெரியும். நான் அவர்களுடைய நண்பன் போலவேதான் பழகுவேன். அதனால்தான் எனக்கு ரசிகர்களிடம் நல்ல உறவு இருக்கிறது. ஒரு ஹீரோவுக்கு ரசிகர்களாக இல்லாமல், எனக்கு அவர்கள் நல்ல நண்பர்களாக இருப்பதையே விரும்புகிறேன்.”

- யுவா